Header Ads



முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது, இது நாட்டின் சட்டத்தை சவாலுக்குட்படுத்துவது அல்ல - 189 நாடுகளில் அடக்கம் செய்ய அனுமதி


அயல் நாடான இந்தியா உட்பட உலகில் உள்ள 189 நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இறக்கும் நபர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கி இருப்பதாக நீதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு இதனை அங்கீகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் மக்களின் இந்த கோரிக்கையானது நாட்டின் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்துவது அல்ல. இது அவர்களின் நியாயமான கோரிக்கை.

முஸ்லிம் மக்களின் இந்த கோரிக்கையை அடிப்படையாக கொண்டு சிலர் அரசியல் லாபம் பெற முயற்சித்து வருகின்றனர். மேலும் சிலர் முஸ்லிம் மக்களை அடிப்படைவாதிகள் என முத்திரை குத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று நோயால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்யாமல் தகனம் செய்ய வேண்டும் என்ற சுற்றறிக்கையை முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க வெளியிட்டிருந்தார்.

இதனடிப்படையிலேயே கொரோனா காரணமாக இறக்கும் நபர்களின் இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் முஸ்லிம்களை தமது மத முறைப்படி அடக்கம் செய்ய இடமளிக்குமாறு முஸ்லிம் மத தலைவர்கள் அரசாங்கத்திடம் பல முறை கோரிக்கை விடுத்திருந்தனர்.


6 comments:

  1. முஸ்லீம்களின் அனைத்து கோரிக்கைகளிளும் உன்மையும்,நியாயாயமும்,மனிதநேயமும்,இறையச்சமுமம் இருக்கும்.ஏன் என்றாள் அவன் மறுமைக்காக வாழ்பவன்.

    ReplyDelete
  2. Asked whether Sabry, in his capacity as the Justice Minister gave an assurance to the CTJ, the National List MP said: “Not at all. I never gave such an assurance.”
    Responding to The Island query, Minister Sabry said he had made it clear to all concerned, both in and out of parliament, that there were many who sought permission to bury Muslim corona victims in terms of WHO regulations. Minister Sabry said that he urged all parties to the issue to be patient and not to politicize the issue. “Protests and bids to attract international attention will make it worse,” the President’s Counsel said, revealing those who requested for burials to resume were planning to launch a protest campaign. Minister Sabry explained the rationale at a recent state sponsored religious event at Kollupitiya.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களே, முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது என்று நீங்கள் கூறுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது. ஏன் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் உங்களால் போராடி ஜனாசா எரிப்பை தடுக்க முடியாதா?..முடிய வில்லை என்றால், அதற்கான சரியான காரணம் என்ன என்பதையாவது உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லையா?. அமைச்சர் அவர்களே!. இலங்கையின் ஜனாதிபதி ஒரு முஸ்லிமாகவோ அல்லது கிருஸ்த்தவராகவோ இருந்தால், இந்த எரிப்பு நாடகம் நடக்குமா?. அல்லது காரணம் இல்லாத பொய்யான காரணங்களை கூறுவார்களா?
    இது சிறுபான்மை பழிவாங்கள் நிழ்ச்சித் திட்டடம் என்பதை, தன்மானமுள்ள ஒவ்வொரு முஸ்லிமும், கிரிஸ்த்தவனும் நன்கு அறிவான். பட்டம் பதவிகளுக்காக சமயக் கொள்கைகளை புறந்தள்ளி புளப்பு நடத்துபவர்களுக்கு இதுவெல்லாம் புரியாது.
    ஜனாசாக்களை எரிப்பதை போன்று கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட இடங்களையும், கட்டிடங்களையும், கட்டில்களையும், அந்த ஜனாசாக்களை ஏற்றிச் சென்ற வாகனங்களையும் எரித்து விடுமாறு உங்கள் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் சொல்லுங்கள். ஏனென்றால், தொட்ட, பட்ட இடங்களில் பரவக்கூடியதுதானே சிறி லங்கா கொரோனா.
    அந்த இடங்களையும், வாகனத்தையும் சனிடைசர் அல்லது ஏனைய மருந்திட்டு சுத்தம் செய்ய முடியுமென்றால், ஏன் அவ்வாறு ஜனாசாக்களையும் சுத்தம் செய்ய முடியாது. பாவம் சுகாதார துறையினரும், உங்களைப் போன்ற முஸ்லிம் அரசாங்க பொம்மைகளும். சுகாதார அமைச்சருக்கு இடப்பட்டுள்ள கன்டிப்பான உத்தரவைத்தான் அவர் நிறைவேற்றுகின்றார். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் வாய்களுக்கும் கைககளுக்கும் இடப் பட்டுள்ள பூட்டின் சாவி மேலிடத்தில் உள்ளது.
    இதர்க்கு முடிவு துஆ பிரார்த்தனையில் மட்டும்தான் உள்ளது. அதையாவது ஒழுங்கா செய்ங்க. நன்றி

    ReplyDelete
  4. This legal Uncle now only began to know the actual color of his companions................... ok. Tuuuuuuube Light !!!!!!!!!!!!!

    ReplyDelete
  5. தன்னந்தனியாக இனவாதிகளிடம் அகப்பட்டுள்ளீர்கள் மனப்பலமும் சக்தியும் தங்களுக்குக்கிடைக்கவேண்டும்.புதைக்க விரும்பும் அனைத்து இனக்குழுமங்களுக்குமான கோரிக்கையாக இதனை மாற்றினால் இனவாதத்தீ தணியலாம் அல்லவா?

    ReplyDelete
  6. Ok.Minister if you have the guts can you resign? You can say that you couldn't stop injustice done to Muslim community and it is their religious right.Also it is clearly mentioned in the constitution.You know it. Will you do it Justice minister? Niyas Ibrahim.

    ReplyDelete

Powered by Blogger.