பாராளுமன்ற ஆசனங்களில் பன்றி எண்ணெயை தடவப்பட்டு, 17 கன்னிகளுக்கு பால் அபிஷேகம் நடந்ததா..?
தனதுரையில் வித்தியாசமான கருத்துகளைத் தெரிவித்த ஆளும் கட்சியின் எம்.பியான டிலான், ஜனாதிபதி பதவிக்காக, 17 கன்னிப் பெண்களை பாலால் அபிஷேகம் செய்தவர் யாரெனக் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், அந்த ஜனாதிபதிப் பதவிக்காக, சபைக்குள் இருக்கும் ஆசனங்களில் பன்றி எண்ணெயை தடவியுள்ளார். அந்தப் பன்றி யாரெனக் கேள்வியெழுப்பிய அவர், நாடாளுமன்றத்துக்குள் மந்திரவாதிகளும் அழைத்துவரப்பட்டனர் என்றார்.
சபையில் நேற்று (12) நடைபெற்ற 2020 நிதியொதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், இந்த விவாதத்தில் கலந்துக்கொள்ளாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தீர்மானித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், கூட்டமைப்பின் முகங்களில் தென்படுகிறது என்றார்.
உணர்வுகளுக்கும் சுய உரிமைக்கும் மதிப்பளிக்காத மூட நம்பிக்கையின் உச்சம் தொட்ட மூடர்களின் கூடாரம். மந்திரவாதிகள் அரங்கேற்றும் அகோரி நாடகமும் இங்கே இன்னும் கொஞ்ச நாளில் பார்க்கலாம்.
ReplyDeleteவெற்றி தோல்வி லாபம் நட்டம் கண்ணியம்கேவலம் அனைத்தும் எம்மைப் படைத்து பரிபாலிக்கும் அழ்ழாஹ்வின் கையிலுள்ளது என்ற நம்பிக்கை உறுதியாகும் வரை இது போன்ற மூடநம்பிக்கைகள் தவிர்க்க முடியாதவை
ReplyDelete