Header Ads



16 ஆவது ஜனாஸாவும் எரிப்பு: அச்சத்தில் முஸ்லிம்கள்


(மீள்பார்வை)

கொவிட் 19 தொற்றின் இரண்டாவது அலை காரணமாக மரணங்கள் அதிகரித்து வருகின்ற வேளையில், 16 ஆவது முஸ்லிம்களின் மரணமும் பதிவாகியுள்ளது.

இதுவரை மரணித்த 30 பேரில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்களாக இருப்பதோடு அவர்கள் ஜனாஸாக்கள் சர்வதேச எதிர்ப்புக்களையும் மீறி எரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 16 முஸ்லிம் ஜனாஸாக்களும் இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை வீடுகளில் மரணிப்பவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. மரணித்தவர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிசிஆர் பரிசோதனை அறி்க்கை வரும்வரை ஒரு நாளுக்கும் அதிகமான நேரங்கள் வைக்கப்பட்டபின் ஜனாஸாக்கள் ஒப்படைக்கப்ட்ட சம்பவங்களும் பதியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மரணம் நிகழ்ந்தால் ஒன்று எரிக்கப்படுதல், அல்லது ஒரு நாளைக்கும் மேல் மையத்தை வைத்திருத்தல் என்ற நிச்சயமான இரு நெருக்கடிகளுக்கு முஸ்லிம் சமூகம் ஆளாகியிருப்பதாகவும், ஜனாஸா எரித்தல் தொடர்பான முடிவுகள் வரும்வரை தாம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவலத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் பலரும் மீள்பார்வைக்குத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்காலிக நிவாரணமாக வீட்டிலேயே பிசிஆர் செய்து கொள்வதற்கான வசதிகளைச் சில தொண்டு நிறுவனங்களும் தனிநபர்களும் செய்து வருவதோடு, ஜனாஸாக்களுக்கென அரசாங்கத்தால் வேண்டப்படும் சவப் பெட்டிகளை இலவசமாகப் பெற்றுத் தருவதிலும் சில அமைப்புக்கள் முன்வந்துள்ளன.

9 comments:

  1. We have to push the gov all together as planned by CTJ pls organize all together

    ReplyDelete
  2. சரிங்கடாப்பா. கொராணாவைக் காட்டி ஜனாசாவை எரிக்கிறீங்க. அதுக்கு ஒரு பொட்டிய வாங்கிக் கொடுக்க வக்கில்லாத அரசாங்கமா எங்கட நாட்டில இருக்கு.

    ReplyDelete
  3. innalillahiwainnailaihirojiun

    ReplyDelete
  4. What's happening here is not only taking revenge but also there is war between islam and buddhism. They trying to show that muslims are more affected and killed by corona than Buddhist people, from their to claim that Buddhism is superior to islam .
    Sinhalese jealousy over islam is much more than our economy.
    What a shame people,

    ReplyDelete
  5. உலகத்தில் எல்லா நாடுகளிலும் எங்கள் நாட்டு முஸ்லீம் சகோதர்கள் ஏதோவொரு தொழிலில் பெரிய அந்தஸ்தில் இருக்கிறார்கள் அவர்கள் அந்த அரசோடு இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு நிலைமைகளை எடுத்து சொல்லி இராஜாங்க முறையில் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  6. So called politicians what are you doing? Especially the mps from the east jumped from opposition to support 20th.Backboneless people.Niyas Ibrahim.

    ReplyDelete
  7. அணைத்து முஸ்லீம் MPகளும் ஒன்றாக இராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு போங்கள். அப்போது உலகத்தின் பார்வை எம் மீது விழும்

    ReplyDelete
  8. அச்சப்பட வேண்டியவர்கள் இந்த அநியாயத்தை செய்பவர்கள் தான்.

    ReplyDelete
  9. This can not be solved by resigning all MPs or protest by so called CTJ which will make majority community to look at us in different angle.This is what ruling politicians want because they want to use muslims for their politics.
    Some of our members used diplomatic way and also waiting for the supreme court ruling. Only thing finally we have to submit this to Allaah to give hidayath or punish the culprits.

    ReplyDelete

Powered by Blogger.