குறைந்தபட்ச பஸ் கட்டணம் 14 ரூபாவாக அதிகரிப்பு
இன்று -10- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
COVID-19 தொற்று அபாய நிலைமை காரணமாக 1.2 வீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 12 ரூபாவில் இருந்து 14 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment