நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,060
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்றைய தினம் (01) 397 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,060 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 4,905 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 6,134 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment