Header Ads



முஸ்லிம்களின் மனநிலையை புரிந்து ஜனாஸாக்களை அடக்க கரிசனை காட்டுங்கள் அலி சப்ரிக்கு CTJ கடிதம்


நீதி அமைச்சர் அலி சப்ரி,

நீதி அமைச்சு,

கொழும்பு - 12

29.10.2020

நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்..

கொவிட் 19 – கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாம் அலையை இலங்கை சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கொரோனா தொற்றுகை காரணமான இதுவரை இலங்கையில் 19 பேர் மரணித்துள்ளார்கள் என்பதை தாங்களும் அறிவீர்கள்.

அதிலும், இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள இந்நேரத்தில் ஒரே நாளில் 03 பேர் மரணிக்கும் அளவுக்கு இதன் தாக்கம் ஏற்பட்டு வருகின்ற இந்நிலையில் கொரோனாவில் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மறுத்து எரிக்கும் முறையை இலங்கை அரசு கடைப்பிடித்து வருகின்றது. 

உலகின் அனைத்து துறைகளிலும் பாரியளவு வளர்ந்த ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்து வரும் நிலையில் நம் நாட்டில் இதுவரை அதற்கான அனுமதி தரப்படவில்லை.

மரணித்தவர்களின் உடல்களை அடக்க மறுத்து எரிக்கும் இந்த நடைமுறை காரணமாக இலங்கை முஸ்லிம் சமூகம் பாரிய மன அளுத்தத்திற்கு தள்ளப்பட்டிருப்பதை முஸ்லிம் சகோதரராக நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

தற்போது அமையப் பெற்றுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பலம் கொண்ட அரசின் நீதி அமைச்சர் என்ற உயரிய பதவியில் அமர்ந்திருக்கும் நீங்கள் இந்த விவகாரம் தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி ஜனாஸாக்களை எரிக்காது அடக்கம் செய்வதற்கான அனுமதியை பெற்றுத்தர முழு முயற்சி எடுக்க வேண்டும் என முஸ்லிம் சமூகம் சார்பில் இந்தக் கடிதம் மூலம் உங்களிடம் வேண்டிக் கொள்கின்றோம்.

இந்த விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் (28.10.2020) அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ சார்பில் உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பி ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். என்பதையும் சமூகம் சார்ந்து உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

எனவே, இலங்கையின் நீதி அமைச்சர் என்ற வகையிலும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த, முஸ்லிம்களின் மன குமுரல்களை புரிந்து கொள்ளக் கூடிய ஒருவர் என்ற வகையிலும் இந்த விவகாரத்தில் கூடிய கரிசனை செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

இவன்,

R. அப்துர் ராசிக் B.COM

பொதுச் செயலாளர்,

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

2 comments:

  1. Good. Keep up the pressure.

    May I suggest that instead of being the ONLY Organisation taking up the Cause, why not get other Muslim Organisations also to join you and send a joint Memorandum to the President, the Prime Minister with a copy to the Justice Minister?

    ReplyDelete
  2. இந்த கோரிக்கையை யார் யாரிடம் கேட்கவேணும் என்று புரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.