தனிமைப்படுத்தலை மீறினால் பிடிவிராந்து, இன்றி கைது செய்யப்படுவீர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்கள் பிடிவிராந்து இன்றி கைது செய்யப்படுவர் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ள ஓர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டை வெளியேறினாலோ அல்லது அந்த வீட்டுக்கு எவரேனும் பிரவேசித்தாலோ பிடிவிராந்து இன்றி கைது செய்யப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், வீட்டில் இருப்பவர்கள் எவருக்கேனும் அவசர மருத்துவ உதவி தேவையென்றால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியும் எனவும் அவ்வாறு செய்யும் போது உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
குடும்பம் ஒன்று வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் போது இதுவரையில் ஒட்டப்பட்ட துண்டுப் பிரசுரத்திற்கு மேலதிகமாக வேறும் ஒர் துண்டுப் பிசுரசூரமும் ஒட்டப்பட உள்ளது.
இந்த புதிய துண்டுப் பிரசுரத்தில் பிரதேச பொலிஸ் நிலைய தொடர்பு இலக்கம், சுகாதார பரிசோதகரின் தொடர்பு இலக்கம், மாவட்டச் செயலகத்தின் தொடர்பு இலக்கம் என்பன குறிப்பிடப்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Atleast 3 time food provided
ReplyDelete