Header Ads



இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான, பாராபட்சத்தை நிறுத்துங்கள் - சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள்


இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரத்திற்கு தீர்வை காணவேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை ஜனாதிபதி பிரதமரை கேட்டுகொள்ளவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது

மைக்பொம்பியோவின் விஜயத்திற்கு முன்னதாக அவருக்கு எழுதிய கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது

சர்வதேச மன்னிப்புச்பை தனது தெரிவித்துள்ளதாவது

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தி;ன் கீழ் உடன்படமறுப்பதற்கான விமர்சனங்களை முன்வைப்பதற்கான சூழலும் தளமும் குறைவடைகின்றது.

நியுயோர்க் டைம்சி;ன் பத்திரிகையாளர் தர்சா பஸ்டியன் துன்புறுத்தப்படும் சம்பவம்,புளொக் பதிவாளர் ரம்சி ராசீக் தன்னிச்சையாக கைதுசெய்யப்பட்டமை,ஹெஜாஜ் ஹிஸ்புல்லா தடுத்துவைக்கப்பட்டுள்ளமை,எழுத்தாளர் சக்திக சத்துகுமார தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை போன்ற சம்பவங்கள் இதனை புலப்படுத்தியுள்ளன.

ரம்சி ராசீக் செப்டம்பர் 17ம் திகதி விடுதலை செய்யப்பட்டார் எனினும் அவருக்கு எதிரான குற்றவியல் விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன,

ஹெஜாஸ் ஹில்புல்லா எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாத நிலையில் அவர் தவறிழைத்தார் என்பதற்கான நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதா தடைச்சட்டத்தின் கீழ் அவர் ஆறு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனது சட்டத்தரணியையும் குடும்பத்தவர்களையும் சந்திப்பதற்கு மட்டுப்படுத்தபட்ட அனுமதியே வழங்கப்பட்டுள்ளது.

அவரை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான மூன்றாவது தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அவரை தாமதமின்றி விடுதலை செய்யவேண்டும்.

நாட்டின் முஸ்லீம் சமூகத்தினரிற்கு எதிரான பாராபட்சம் மற்றும் வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதுடன் முஸ்லீம் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்தவேண்டும்.

முன்னர் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களான பொதுமக்களிடம் வழங்குவதுடன் இழப்பீடுகளையும் வழங்கவேண்டும்

No comments

Powered by Blogger.