இஷாக், பைஸல், ஹாரிஸ்,தௌபீக், நசீர், ரஹீம், முஷாரப் ஆகியோர் நீக்கப்பட்டதாக அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக கூறி, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ,ஆசனங்களை ஒதுக்குமாறும் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் டயானா கமகே உள்ளிட்ட 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஒன்பது நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
20 ஆவது அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் விபரம்:
1. டயனா கமகே
2. அருணாசலம் அரவிந்த குமார்
3. இஷாக் ரஹ்மான்
4. பைஸல் காசிம்
5. எச்.எம்.எம்..ஹாரிஸ்,
6. எம்.எஸ்.தௌபீக்,
7. நசீர் அஹமட்
8. ஏ.ஏ.எஸ்.எம். ரஹீம்
9. எம்.எம்.எம். முஷாரப்
super decision,congurlation good leader
ReplyDeleteஇவரகளை ஐக்கிய மக்கள் சக்தி நீக்கினால் என்ன நீக்காவிட்டால் என்ன. என்று தம் கையை 20க்கு ஆதரவாக உயர்த்தினார்களோ அன்றே அவரகள் ளுடுPP யில் இணைந்துவிட்டார்கள். இவரகளை ளுடுPP யும் நிராகரித்தால் இருக்கவே இருக்கின்றது மக்கள் சக்தி (அனுரகுமார திஸநாயக்கா) இதற்கு முதல் இவரகளை முஸ்லிம் காங்கிரஸ் விலக்க வேண்டுமே. முதலில முதுகெலும்பு உள்ளவரகள் இவரகளை விலக்கட்டும பார்ப்போம்.
ReplyDeleteஏற்கனவே அமிழப்போகும் கப்பல்.
ReplyDeleteகட்சி தலைவர்கள் உங்களுக்கு பிரச்சினை இல்லையா. அவர்கள் சொல்லித்தானே நீங்கள் விளங்கியவர்கள் 20க்கு ஆதரவு தெரிவித்தார்கள்.