நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது, எச்சரிக்கை விடுக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்
மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டி கொவிட் தொற்று மிகவும் மோசமான நிலையை ஏற்படுத்தி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
பேலியகொட உப கொத்தணியுடன் நாடு பூராவும் கொவிட் தொற்று பரவி உள்ளதாகவும் சில தொற்றாளர்கள் அறிகுறிகள் இன்றி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் மேல் மாகாணத்தின் கொழும்பு மாநகர சபையின் சில பிரதேசங்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார பிரிவினரிடம் இருந்து நழுவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment