பிரான்சின் உற்பத்தி பொருட்களை, இலங்கை முஸ்லிம்களும் பகிஸ்கரிக்க வேண்டும்
ஊடக பிரிவு
முஸ்லிம்களின் உயிர் மூச்சாக மதிக்கப்படும் இறைதூதர் முஹம்மது நபியைக் கேலி செய்ய அனுமதித்த பிரான்ஸின், உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஷ்கரிக்க வேண்டும் எனஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ள ஐரோப்பா, மத நிந்தனைகளைக் கண்டு மகிழ்ச்சியுறுவது கவலையளிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நடந்து கொண்ட விதம் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்கள் குறித்து ஹாபிஸ் நஸீர்அஹமட் எம்பி தெரிவித்துள்ளதாவது;
தங்களது உயிரை விடவும் இறைதூதர் முஹம்மது நபியை முஸ்லிம்கள் மேலாக மதிக்கின்றனர். இஸ்லாம் வலியுறுத்தும் மறுவுலக வாழ்வின் ஈடேற்றத்துக்கு முஹம்மது நபியின் "ஷபாஅத்" பரிந்துரை அவசியம் என்பதும் முஸ்லிம்களின் நம்பிக்கை. இதற்காகத்தான் நாளாந்தமும் ஐவேளைத் தொழுகையிலும் நபிமீது ஸலவாத்துச் சொல்கிறோம்.அருள்மறை விளக்காகத் திகழும் இத்தனை முக்கியம் வாய்ந்த இறைத்தூதரை ஐரோப்பா தொடர்ந்தும் கேலி செய்தே வருகிறது.
சிலுவை யுத்த தோல்வியாளார்களின் மன விகாரங்கள் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் வெளிப்படுவதாகவே முஸ்லிம் உலகம் இதைக் கருதுகிறது.மனிதர்களிடையே மோதலைத் தூண்டி இரத்தத்தை ஓடச் செய்யும் இவ்வாறான கருத்துச் சுதந்திரங்கள் அவசியம்தானா, இதுபற்றி ஐரோப்பா ஏன் சிந்திக்கவில்லை? சத்திய இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களே இவ்வாறான இழி செயலைப் புரிகின்றனர்.
இதிலிருந்தாவது இஸ்லாம் வாளாலும் பலவந்தத்தாலும் பரப்பப்படவில்லை என்பதை ஐரோப்பா குறிப்பாக டென்மார்க் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். மிகப் பெரிய கலாசார மோதல்களுக்குத் தூபமிடும் இவ்வாறான இழி நோக்குடைய கருத்துச் சுதந்திரத்தை பிரான்ஸ் உடனடியாக நிறுத்துவது அவசியம்.நிறுத்தும் வரைக்கும் அந்நாட்டின் உற்பத்திப் பொருட்களை முஸ்லிம் நாடுகள் தடை செய்துள்ளன.
இதைப் பின்பற்றி இலங்கை முஸ்லிம்களும் பிரான்ஸின் பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும்.மொழி,நிறம்,பிரதேசம் கடந்து மதத்தால் ஒன்றிணைந்த முஸ்லிம்களின் உணர்வுகள் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளதுதான் எமது பலம். கொரோனாவின் கொடிய அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது முஸ்லிம் உலகம் ஒன்று கூடிப் பிரான்ஸைக் கண்டிக்கின்றமை, உயிரை விடவும் முஸ்லிம்கள் இறைதூதர் முஹம்மது நபியை நேசிக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ankala oru 20 rupees varalla pola
ReplyDeleteNee yaruppa engalukkuch cholla.
ReplyDeleteComedian
ReplyDeleteNeeyum oru aalunu pesuriyaa🤣🤣🤣
Who the bloody hell are you to talk to the Muslims of this country? You are a traitor
ReplyDeleteஒரு கட்சியிலிந்து கொண்டு மற்றய கட்சிக்கு வாக்கு போட்டவர் சொல்லுரார்.
ReplyDeleteLeave the Muslim community to live peacefully in Sri Lanka without getting crowned as traitors. We are not worried about you all because you all are branded as political traders.
ReplyDeletewe all love our prophet. We all condemn what this teacher did. We also say what that student did was a wrong action as well. We all know that some nationalists and media take Islam as mockery and UN has failed to take action against them. No human right commission talk about it . When it come to Islam these inept Arab leaders have failed many time. Look what Salman does in Saudi. Introduce many anti-Islamic practices and jail hundreds of good Muslim clerics. So called Salafi groups do not talk about this. Any way a trade war is not a practical one for this problems. Some will do it and most will do deal with France. some Arab countries are enemies of Muslims and Islam. See how Saudi treat poor Yemen and so on. yet, Saudi agents in Sri lanka do not open the mouth about this injustice
ReplyDeletewe were waiting until you informed to us......
ReplyDeletenazeer your blady bullshit , thugs
ReplyDeleteஅத நாங்க பாத்துகிறோம் . நீ போய் அங்கட்டு சொம்படி
ReplyDelete20KKU KAIAI UYARTHUKIROM. KURAINDAPATCHAM, MUSLIMGALIN JANAZAVAI ERIPPATHAI NIRUTHU, ENRU KETTIRUNDAALUM
ReplyDeletePARAVAAYILLAI. KAIAI UYARTHAAMAL
KEELAADAIYAI UYARTHI IRUKKALAAM.
உங்கள் கருத்துக்கள் வேண்டுதல்கள் எல்லாம் சமூகத்தின் மத்தியில் மதிப்பிழந்து விட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteகஞ்சைக் குடித்து பன்னீரைக் கொப்பளிக்கும் மாமனிதர் இவர்!
ReplyDeleteஇந்த விடயத்தை உலக நாடுகள் பார்த்துக் கொள்ளும்.நீங்கள் நம் நாட்டு பிரச்சினையான கொரோனா ஜனாஸா க்கள் எரிக்கப்படுவதை உங்கள் அரசால் தடுக்கப் பாருங்கள்.
ReplyDeleteசொல்லிடாரு சுத்தமான சூசைபிள்ளை
ReplyDeleteWhy didn’t he condemn the cremation of janazas in Sri Lanka with same intensity. At least he could have negotiated with the government before he threw his support to 20A.
ReplyDeleteபிரான்சின் உற்பத்திப் பொருள்களை இலங்கை முஸ்லிம்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தற்போது அவசியமற்றது. தற்போது தலைவா நீங்கள் அரசாங்கக் கட்சியில் அடைக்கலம் புகுந்துள்ளதால் கொரணாவால் மரணிக்கும் முஸ்லிம்களை அவரகளது மதவிழுமியங்களின்படி அடக்கம் செய்வதற்கு அரசை வலியுறுத்துங்கள். அல்லது தற்செயலாக நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவரோ அல்லது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரோ கொரணாவினால் இறந்தால் நிச்சயம் எரித்தே விடுவார்கள்.
ReplyDeleteஇவன் ஒரு சகட இவன்தான். 20 க்கு தலைவன் 18 க்கு தலைவர் 19 க்கு அலிபாபா கூட்டம்
ReplyDeleteஇலங்கை முச்சீலிம் கட்சிகள் எல்லாம் அலிபாபா கூட்டம் பாவம் இல்ங்கை முஸ்லிம்
இவன் ஒரு சகட இவன்தான். 20 க்கு தலைவன் 18 க்கு தலைவர் 19 க்கு அலிபாபா கூட்டம்
ReplyDeleteஇலங்கை முச்சீலிம் கட்சிகள் எல்லாம் அலிபாபா கூட்டம் பாவம் இல்ங்கை முஸ்லிம்
எங்களைப் பகிஷ்கரிக்கச் சொல்லிவிட்டு, நீ மட்டும் பின்கதவால் சென்று பிரெஞ்சுப் பொருளை வாங்கித் திண்ணுப்புடுவியே. உன்னை நம்ப ஏலாமக் கிடக்குதைய்யா.
ReplyDeleteFRANCE PORUTKALAI PAKISHKARIKKA
ReplyDeleteKORUKINRAI, ADUTHA THERTHALIL
UNNAI MUSLIMGAL PAKISHKARITHU
VEETTILEY UTKAARAVAIKAVENDUM
ENRU NAAN KETTUKOLKIREN.