"வடபுல முஸ்லிம்களின் வெளியேற்ற பின்னணி பற்றி சிந்திக்க வேண்டும்"
-ஹிஜாமா-
வடபுல முஸ்லிம்கள் மீதான ஆயுத பலாத்கார வெளியேற்றம் நிகழ்த்தப்பட்டு நேற்றுடன் 30 வருடங்கள் கடந்துள்ளன. அடிப்படையில் பாசிஸ சித்தார்ந்தங்களால் கட்டமைக்கப்பட்ட அமைப்பொன்று இந்த முடிவை எடுத்தது தொடர்பில் வியப்படைய எதுவுமில்லை.
ஆனால் 1990-களில் விடுதலை புலிகள் அமைப்பென்பது பாரிய கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட விடுதலை அமைப்பல்ல. மரபுரீதியான இராணுவ பலம் கொண்ட அமைப்பும் அல்ல. ஆனால் தனது இராணுவ, அரசியல் பலத்தையும் தாண்டிய ஒரு பெரிய முடிவை அதனால் எப்படி எடுக்க முடிந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
கிழக்கிலங்கை அரசியல் நிலை, இன முரண்பாடுகள், விடுதலை புலிகள் அமைப்பின் அரசியல், இராணுவ தலைவர்களின் காழ்ப்புணற்ச்சி, இனத்துவேஷம் போன்றன 1990 ஒக்டோபரில் எத்னிக் கிளன்ஸிங் எனும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கும் அளவிற்கு தாக்கம் செலுத்தும் வீரியம் கொண்டவையல்ல. ஒரு சிறு குழுவால் பின் எப்படி பெரும் முடிவு எடுக்க முடிந்தது? உள்நாட்டு அரசியல், சமூக முரண்பாடுகளையும் தாண்டிய சர்வதேச அரசியல் தேவைப்பாடு இதில் எவ்வாறான தாக்கங்களை செலுத்தியிருக்க முடியும் என்ற கோணம் இங்கு உறுத்துகிறது.
இந்தியாவின் கூடங்குளம் அனு மின்சார உற்பத்தி ஆலை மார்ச் 2002-ல் கட்டமைக்க ஆரம்பிக்பட்டு அது 2013ல் இந்திய சில தென்னக மாநிலங்களிற்கு 2000 மெகாவார்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இது அனு மின்சார உற்பத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட கருத்திட்டம் அல்ல.
1987ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் ரஷ்ய பிரதமர் மிகைல் கொர்பசேவ்வின் கூட்டுறவுடன் உருவாக்கப்பட்ட திட்டம். அனு உற்பத்தி ஆலையாக அதனை உருவாக்க இருந்தனர். திருநெல்வேலி மாவட்ட ராதாபுரத்தில் அது அமைக்க திட்டமிடப்பட்டது.
ஒரு சின்ன அனுக்கசிவும் மொத்த தமிழ்நாட்டையும் இல்லாமல் செய்து விடும். அதன் பாதுகாப்பு பிரதானம். இந்தியாவின் அனு ஆலைகளை பாகிஸ்தானிய உளவமைப்பான இன்டர் சேர்விஸ் இன்டலிஜென்ஸ் எந்நேரமும் தாக்குவதற்கான வாய்ப்பு தொடர்பில் இந்தியாவில் அவ்வமைப்பு செயற்பட சுதந்திரமாக முடிாய விட்டாலும் கடல்வழி நெருங்கிய அண்டை நாடான இலங்கையின் வடக்கு பகுதியில் அது நிலை எடுக்க வாய்ப்பிருந்தது. அங்குள்ள முஸ்லிம் மத்தியில் அது தனது தளத்தை உருவாக்கினால் அச்சுறுத்தல் பெரிதாகிவிடும்.
மன்னார் முஸ்லிம்களினது கடற்கரை பகுதிகள் இதற்கு வாய்ப்புமிக்க இடமாக இருந்தமை ஜியோ மிலிட்டரி ரீதியில் மறுக்க முடியாத உண்மை. வடபுல வெளியேற்றத்தின் பின்னணி பற்றிய கேள்விகளில் இந்த கோணம் புறந்தள்ள முடியாதது.
கிழக்கிலங்கை முஸ்லிம் பகுதிகள் குறித்து தொடர் கண்காணிப்பும் அங்கே லஷ்கர் போன்ற அமைப்புக்கள் இருப்பதான பரவலான குற்றச்சாட்டக்களும், கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அமைதிப்படை ஆயுத விதைப்பை செய்தமையும் அந்த பிராந்திய முஸ்லிகளினது கடல் ஆதிக்கத்தை கட்டப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஒரு நகர்வா என்ற கேள்வியையும் எழ வைக்கிறது.
கிழக்கிலங்கை முஸ்லிம்கள் துல்லியாமாக கண்காணிக்கப்படல் வேண்டும். என்பதற்கான சகல நகர்வுகளும் நிகழ்த்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. அவ்வாறு அவர்கள் கண்காணிக்கப்பட்டால் பிராந்திய நலன் தொடர்பில் தங்கள் பாதுகாப்பை இலகுவாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்ற யுக்தியின் நகர்வுகளா இவை என்ற கேள்விகளின் விடை என்ன?
தேசிய விடுதலை என்ற பெயரில் செயற்பட்ட பாசிஸ கட்டமைப்பைக் கொண்ட பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகளை, ஆபிரிக்காவின் கொங்கோ, லைபீரியா, ருவாண்டாவில் உள்ள மேசனரி கும்பல்கள் போல் பயன்படுத்திருப்பதற்கான வாய்ப்புக்கள் பற்றி கவனித்தல் அவசியம். பிராந்திய நலனிற்காக மாலைதீவில் புளொட் அமைப்பை களமிறக்கிய ஞாபங்கள், வடபுல முஸ்லிம்களின் வெளியேற்ற பின்னணி பற்றியும் சிந்திக்க வைக்கின்றன.
Post a Comment