கொரோனா பரவுதலுடன் இராணுவத்திற்கு தொடர்பில்லை - முற்றாக மறுக்கிறார் இராணுவத் தளபதி
கொரோனா வைரஸ் தொற்று பரவுகையுடன் இராணுவத்திற்கு தொடர்பு என சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஒரு ஹோட்டல் ஒன்றிலேயே இந்த கொரோனா இரண்டாம் அலை ஆரம்பித்தது இதற்கு இராணுவத் தளபதியும் இராணுவமும் பொறுப்பு சொல்ல வேண்டுமென இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஹோட்டலின் பாதுகாப்புடன் இராணுவத்திற்கு எவ்வித தொடர்பும் கிடையாது எனவும், குறித்த செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து வரும் விமான சேவை நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்களை தனிமைப்படுத்தும் ஹோட்டல்களுக்கு இராணுவம் பாதுகாப்பு வழங்குவதில்லை எனவும் விமானப்படையினரே பாதுகாப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இராணுவத்திற்கு எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் அவர் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment