Header Ads



கலிபாவிடமிருந்து பறந்த ஒரு கடிதம் - நடுங்கிப்போன பிரான்ஸ் என்ன செய்தது தெரியுமா...?


- M S Abdul Hameed -

கி.பி. 1890களில் ஃபிரான்சின் பாரிசில் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களைக் கேலி செய்யும் விதமாக ஒரு நகைச்சுவை நாடகம் நடந்துகொண்டிருந்தது.

உதுமானியப் பேரரசின் கலீஃபாவான சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீது அவர்களுக்கு இது தெரிய வந்தது. உடனடியாக இந்த நரகல் நாடகத்தை நிறுத்தவேண்டும் என்று எச்சரித்து ஃபிரஞ்சுத் தூதருக்கு சுல்தான் அவர்கள் கடுமையாக ஒரு கடிதம் எழுதியனுப்பினார்.

“நான் பால்கன்ஸ், ஈராக், சிரியா, மௌண்ட் லெபனான், ஹிஜாஸ், கவ்கஸஸ், அனடோலியா ஆகியவற்றின் சுல்தான் ஆவேன். எனது தலைநகரம் இஸ்தான்புல். நான்தான் கலீஃபா அப்துல் ஹமீது கான். இறைத்தூதரைக் கேலி செய்யும் நாடகத்தை நிறுத்தவில்லையெனில், உங்கள் தலைகளுக்கு மேலுள்ள உலகத்தை அழித்துவிடுவேன்” என்று அக்கடிதத்தில் சுல்தான் அப்துல் ஹமீது குறிப்பிட்டிருந்தார்.

கடிதத்தைக் கண்டதும் அலறிப்புடைத்துக்கொண்டு நாடகத்தை நிறுத்தியது ஃபிரஞ்சு அரசு. அத்தோடு கலீஃபாவை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக இங்கிலாந்துக்கு அந்த நாடக நடிகர்களை நாடு கடத்தவும் செய்தது.

அன்று உலக முஸ்லிம்கள் ஒரே தலைமையின் கீழ் இருந்ததால் ஐரோப்பிய நாடுகளும் இதர நாடுகளும் முஸ்லிம் தலைமையைக் கண்டு அஞ்சின. எனவே அல்லாஹ்வின் தூதரின் மேலுள்ள அவமதிப்பை ஒரு கடிதம் கொண்டு நிறுத்திக்காட்டினார் அன்றைய கலீஃபா அப்துல் ஹமீது.


2 comments:

  1. இன்றும் உலக முஸ்லிம்கள் அவ்வாறு ஒரே தலைமையின் கீழ் ஆட்சி செய்யப்பட உரிமை பெற்றவர்களே. மார்க்கத்தைக் கற்று நம் வாழ்வில் அதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், ஏனையோர் மத்தியில் நல்லதை ஏவி தீமையைத் தடுக்கும் பணிகளை விரைவுபடுத்துவதன் மூலம் அது இன்றும் சாத்தியமே. இலங்கை, பிரான்ஸ் போன்ற சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பும், கெளரவமும் அதில்தான் உள்ளது.

    ReplyDelete
  2. Sultan Abdul Hameed (R) is a role model in contemporary history of Muslims.

    ReplyDelete

Powered by Blogger.