அலிசாஹிரின் உருக்கமான அறிக்கை
எல்லா வகையிலும், இந்த தொற்றுநோயை அதீத கவனம் செலுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற மனப்பக்குவத்துடன் எமது மக்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகம் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கிவருகிறோம் .
உலகெங்கிலும் நடைமுறையில் உள்ள சர்வதேச சுகாதார அமைப்பின் விதிமுறைகள், வழிகாட்டல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக கோவிடினால் இறப்பவர்கள் இவ் உலகவாழ்வின் இறுதிப்பயனத்தை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டிய நடைமுறையை ஏனைய நாடுகளில் அமுல்படுத்துவது போன்று எமது நாட்டிலும் அமுல்படுத்தப்படவேண்டுமென்பதை நாங்கள் கேட்டுள்ளோம். இலங்கை சுகாதார விதிமுறைகள் மாத்திரம் இதற்கு ஒரு விதிவிலக்கை ஏற்ப்படுத்தி மரணிக்கின்ற முஸ்லிம் மையத்துக்களையும் எரியூட்டுகின்ற நடவடிக்கையைத்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விவகாரத்தில் சுகாதார அதிகாரிகள் ஒருவித காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுகின்றார்கள் சர்வதேச விதிமுறைகளைப்பேணி நல்லடக்கம் செய்யலாம் என்ற நடைமுறையை கொண்டுவருவதற்க்கான ஒத்துழைப்பை வழங்காது செயற்ப்படுகின்றார்கள் என்ற செயற்ப்பாட்டை நானும் இன்னும் இந்த விசயத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட பலரும் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுக்களை சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் (DGHS) அரச சட்டமா அதிபர் (அட்டர்னி ஜெனரல் ) மற்றும் இது தொடர்பான பொறுப்பாளர்களை பெயரிட்டு வழக்குத்தொடர்ந்துள்ளோம். அடுத்த நீதிமன்ற விசாரணைகள் நவம்பர் 26 ஆம் திகதி நாள்தரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கோவிட் இறப்புக்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் இந்த தருணத்திலே மனிதாபிமான அடிப்படையில் இந்த அத்தியவசியமான அவசர பொது வேண்டுகோளை எமது நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தை தன்னகத்தே கையிலெடுத்துள்ள ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அவர்களிடமும், கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர் களிடமும், கெளரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கெளரவ சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் கெளரவ . நீதி அமைச்சர் அலி சப்ரி போன்றோர்களிடம் எங்கள் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள படி எங்களது மார்க்க சுதந்திரங்களை மதித்து தகனம் செய்கின்ற செயற்பாட்டை மாற்றியமைத்து குறிப்பாக கோவிடினால் இறக்கின்ற வர்களை நல் அடக்கம் செய்வதும் உலகளவில் நிறுவப்பட்ட நடைமுறையாக இருக்கிறது. அவ்வாறே இந்த நடைமுறையை உணர்ந்து நமது நாட்டிலும் அமுல்படுத்துங்கள் என்பதை முன்வைப்பதுடன் அனைத்து அரசியல் தலைவர்களும் இன, மத, அரசியல் பேதங்களை களைந்து உணர்வு பூர்வமாக உணர்ந்து செயற்ப்படுமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், 20 வது திருத்தத்திற்கு ஆதரவளித்துள்ள முஸ்லீம் எம்.பி.க்கள் , முஸ்லிம் மக்களது வெறுப்புக்கும் இறைவனது சாபத்துக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள எமது மையத்துக்கள் எரியூட்டப்படுகின்ற நிலையை உறுவாக்கியுள்ள இந்த அரசாக்கத்தின் இந்த இழி செயலை கிஞ்சிதமும் கண்டு கொள்ளாது ஆதரவு கொடுத்திருப்பது எமது சமூகத்துக்கு இழைத்துள்ள வரலாற்று துரோகம் என்பதே தவிர உண்மையிலேயே நீங்கள் முஸ்லிம் சமூகத்தின் நண்மைகள் கருதியே பாராளுமன்றத்தில் ஆதரவளத்தீர்கள் என்று மார்தட்டியது , உங்களது சுயநலங்களை மையமாக வைத்து பேரம்பேசிய போலி நாடகங்களே என்பதை இன்று இறைவன் எங்களுக்கு வெளிப்படையாக காட்டியுள்ளான் என்பதுதான் இன்றைய நிதர்சனம் .
ஆயினும்கூட, இந்த 6 எம்.பி.க்களிடம் வினயமாக
கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து உங்களது தனிப்பட்ட அபிலாஷைகளை ஒரு புறம் ஒதுக்கி வையுங்கள்.
நீங்கள் பெற்றுள்ள இந்த பிரதிநிதித்துவத்துக்காக எனது பங்களிப்பையும், பிரச்சாரத்தையும் வழங்கியவன் . நீங்கள் அளித்த வாக்குறுதிகள் இந்த சிக்கலைத் தீர்ப்பதை உள்ளடக்கியது என்பதை மறந்துவிட்டீர்கள்.
எனவே இந்த வாக்குரிதிகளுக்கு முன்னுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
கொள்கைகளை கைவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
செய்யித் அலி ஸாஹிர் மௌலானா,
முன்னால் பாராளுமன்ற உறுப்பினர், முன்னால் இராஜாங்க அமைச்சர்
It is obvious that SL government carrying out cremation as a revenge against Muslims and not for health reasons. Therefore SL Muslims must reach out to Foreign governments especially Muslim countries. Most of these Muslim countries are not aware what’s going on in SL. Nowadays all Muslim countries are condemning France in one voice. If they do it against SL government in a similar manner, we may hope for a change here. As a first step our politicians and other experts and religious leaders should contact foreign embassies on a regular basis. At the same time diasporas should apply pressures to their governments through elected representatives.
ReplyDeleteAll six Muslim MPs
ReplyDeletePlease consider deliberately this issue.
ஊடகம் என்ற வகையில் தனிமனித கெளரவம் பாதுகாக்கப்பட வேண்டும். இஸ்லாமியர்கள் நபி பெருமானார் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வழித் தோன்றல்களை மௌலானா , செய்யித் போன்ற வசனங்களை பாவிப்பது வழக்கம். நீங்கள் இட்டுள்ள தலைப்பில் அது இல்லாமல் அலி சாகிர் என்று மட்டும் போட்டிருப்பது வேதனையாக உள்ளது. தவறுதலாக நடந்திருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். அல்லது தெரிந்தே செய்திருந்தால் முஸ்லிம் சமூகம் அனுபவிக்கும் துயரங்களுக்கு உங்கள் போன்றவர்களே காரணம். இன்னும் நமது சமூகம் அனுபவிக்கும்.
ReplyDeleteமௌலானா!
ReplyDeleteஉங்களதும் ஹக்கீமும் ரிசாத்தும் தலைமை கொடுத்த கட்சிகளினதும் பயிற்சிப் பட்டறையில் பயின்ற கயவர்கள் தானே இவர்கள்.
இறைசாபம் இவர்களையும் உங்களது மேற்காட்டிய தலைவர்கயும் விட்டு வைக்காது.
பதவி இருந்தால் ஒரு விதமும் இல்லாத போது மற்றொரு விதமுமாக விலங்குகள் போன்று செயற்படாதீர்கள்.
இப்போது பிறந்த ஞானத்தின் அடிப்படையில் அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு மாற்று வழி பற்றி சிந்தித்து செயற்படுங்கள்.
What JAHAI says is right. We have to give due respect to Ahlul baith members they are family of our Beloved Prophet Muhammad Sallaal lahu Alahi Wasallam. When writing names, please add Seyyad Moulana for sadath members.
ReplyDelete