யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை, தடை செய்பவர் யார்..?
- எம். முஹம்மத் அலி -
2009 மே 19 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இனச் சுத்திகரிப்புச் செய்யப் பட்டு புத்தளத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் வாழ்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்களில் சுமார் 1200 குடும்பங்கள் மீள்குடியேறும் நோக்குடன் 2010 ஜனவரியில் யாழ்ப்பாணம் சென்றனர்.
அவ்வாறு சென்றவர்களுக்கு அங்கு காட்திருந்தது அதிர்ச்சி தான். அவர்களில் வீடுகளின் கதவுகள் நிலைகள் ஜன்னல்கள் கூரைகள் எல்லாம் உடைத்தெடுக்கப் பட்டு வீடுகளுக்குள்ளும் காணிகளுக்குள்ளும் பற்றைகள் வளர்ந்து வீடு அலங்கோலமாக மக்கள் வசிக்கமுடியாத அமைப்பில் எச்சமாக காணப்பட்டது. வீடுகள் மட்டுமா வணக்கஸ்தலங்களையும் பாடசாலைக் கட்டிடங்களையும் உடைத்து சின்னாபின்னமாக்கி விட்டிருந்தனர்.
சென்றவர்கள் தங்க இடமில்லை. உடைந்த பாடசாலையின் எச்சங்களுக்குள்ளும், உடைந்த வீடுகளின் ஒரு அறையை துப்பரவாக்கி கூரையற்ற அந்த இடத்திலும், பள்ளிவாசல்களின் எச்சங்களுக்குள்ளும், போக்குவரத்து அற்ற ஒழுங்கைகளிலும் மக்கள் இருந்து தமது வீடுகளை மீளமைக்க உதவி கிடைக்குமா எனக் காத்திருந்தனர்.
மீள்குடியேற்றத்துக்காக பதிவு செய்த சுமார் 1200 குடும்பங்களில் 200 குடும்பங்களுக்கு 20000 ரூபா மீள்குடியேற்ற நிதி ஏழு மாதங்களின் பின்னர் வழங்கப் பட்டது. அதுவும் 5000 ரூபா 5000 ரூபா என வழங்கப் பட்டது. அந்த ஐந்தாயிரம் ரூபாவில் என்ன செய்ய முடியும். ஒரு தடவை வழங்கி அடுத்த தடவை வழங்குவதற்குள் ஒரு மாதம் சென்று விடும். மேலும் சில குடும்பங்களுக்கு அலவாங்கும், மண்வெட்டிகளும், டென்டும் வழங்கப்பட்டன.
இவற்றை வைத்துக் கொண்டு என்ன தான் செய்ய முடியும். உடைந்த வீட்டைக் கட்ட தேவைப்பட்டதோ சீமெந்து, கல், மண், கதவுகள், ஜன்னல்கள் கூரைப் பொருட்கள். மண்வெட்டியையும் அலவாங்கையும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்.
வீடு கட்ட உதவி கிடைக்குமென்ற எதிர்பார்ப்புடன் மக்கள் ஒவ்வொரு நாளும் காத்திருந்தனர். நாட்கள் வாரமாகின, வாரங்கள் மாதமாகின. ஆறு மாதங்களின் பின்னரே இரு சிலருக்கு அந்த 20000 ரூபா வழங்கப் பட்டது. இவ்வாறு மக்கள் ஏமாற்றப் பட்டு இழுத்தடிக்கப்பட்டு கிராம் அதிகாரி, நிலமளப்போர், உதவி அரசாங்க அதிபர், அரசங்க அதிபர், அபிவிருத்தி திட்ட அதிகாரி என அலைந்து திறிய வைக்கப் பட்டனர். முஸ்லிம்களின் பணம் எல்லாம் தீர்ந்து மனம் வெருத்துப் போகுமளவுக்கு அலைக்கலிக்கப்பட்டனர். இவ்வாறு செய்தால் முஸ்லிம் மக்கள் திரும்ப ஓடிவிடுவார்கள் என்ற திட்டமாக்கும். இதற்கு யார் பொருப்பு ?
தமிழ் தேசிய கூட்டமைப்பா, தமிழரசுக் கட்சியா, மாவை சேனாதிராசாவா, டக்லஸ் தேவானந்தாவா? யார் பொருப்பு. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையில் மேற்படி கட்சிகளும் தலைவர்களும் இருந்து என்ன செய்தார்கள்? முஸ்லிம்கள் மீள்குடியேறக் கூடாதென திறை மறைவில் செயல்பட்டவர்கள் இவர்களா?
2013 செப்டம்பரில் வடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு அதில் 30 கதிரைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றது. யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள்குடியேற்ற அவர்கள் செய்ததென்ன? பெரும்பாண்மைச் சமூகத்திடம் பாராளுமன்றத்தில் உரிமை கேட்டு போராடும் இவர்கள் அதே உரிமைகளை வடக்கு முஸ்லிம்களுக்கு வழங்க மறுப்பது ஏன்? இவர்களுடைய போராட்டத்தில் ஏதாவது நியாயம் உள்ளதா? அல்லது இவர்கள் நேர்மையானவர்களா?
2013 ஆண்டிலும் அதற்கு பிறகு வந்த ஆண்டுகளிலும் 5000 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை மீள்குடியேற்றத்துக்காக இந்த வடமாகாண சபைக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. அதில் ஒரு ரூபாய் சரி யாழ்ப்பாண முஸ்லிம்களுக்காக அவர்களின் மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப் பட்டதா? அவர்கள் கேட்பது வெரும் 700 வீடுகள் தானே. இந்த 5000 மில்லியனில் 5000 வீடுகளைக் கட்டியிருக்க முடியுமே.
2020 ஆம் ஆண்டு 1375 வீடுகளைக் கட்டிக் கொடுக்க அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தலா பத்து இலட்சம் பெறுமதியான வீடுகள் ஐந்து மாவட்டங்களில் நலன்காப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் இருந்தே இந்த திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவு செய்யப் படுவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கேள்வி: இந்த திட்டத்துக்கு யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் கடந்த 11 ஆண்டுகளாக காணப்படும் அகதி முகாமில் 30 குடும்பங்கள் அடிப்படை வசதி குறைந்த கொட்டில்களில் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு இந்த திட்டத்திலிருந்து எதாவது வீடுகள் ஒதுக்கி கொடுக்கப் பட்டுள்ளதா?
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எனபது நீண்டகாலப் பிரச்சினை. அதனை ஏர்கனவே உள்ள பொறிமுறைகளுக்கு அப்பால் கையாளவேண்டுமென தீர்மானம் செய்யப் பட்டுள்ளது.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் வீடமைப்பு பிரச்சினை என்பது வேறு விதமானது. அவர்கள் நீண்ட தொலைவுக்கு அப்பாலிருந்து மீள்குடியேற முயற்சிப்பவர்கள். அவர்களை வா, வந்து உனது காணியில் கொட்டில் அமை. அதன் பிறகு ஒரு வாரத்தின் பின் நாங்கள் வந்து பார்ப்போம். அதன் பிறகு மூன்று மாததின் பின்னர் ஒரு இலட்சம் தருவோம். அதன் பிறகு இரண்டு மாதத்தில் இரண்டு இலட்சம் தருவோம். பிறகு இன்னொரு தவணையில் இப்படி காட்டம் கட்டமாக பணம் தருவோம் என்றால் அத்தனை மாதங்களும் அந்த மக்கள் அந்த கொட்டிலில் எப்படி வாழ்வது என்பதைக் கூட சிந்திக்க முடியாதவர்களாக தமிழ் அரசியல் தலைவர்கள் உள்ளார்கள்.
யாழ்ப்பாண முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் அவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். முழுமைப் படுத்தி விட்டு வந்து குடியேறு என்பது தான் சரியான முறையாக இருக்கும்.
சாதாரண தமிழ் பொது மக்களைப் பாருங்கள். அவர்கள் முஸ்லிம்களுடன் சகோதர வாஞ்சையுடன் அன்னியோன்யமாக வாழவதை விரும்புகிறார்கள். அரசியல் வாதிகள் தான் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்களை செயற்படுத்துகின்றனர்.
இப்போது கட்சிகள் பல உருவாகியிருக்கின்றது. ஒவ்வொரு நூறு வாக்குகளும் மாற்றத்தை உண்டாக்கும். அந்த வகையில் தமிழ் கட்சிகளுக்கு யாழ்ப்பாண முஸ்லிம்களின் 2000 வாக்குகளும் முக்கியமானவை. விஜயகலா மகேஸ்வரி ஒருமுறை 400 வாக்குகளை முஸ்லிம்களிடம் பெற்றதால் தான் பாராளுமன்றம் சென்றார். இம்முறைத் தேர்தலிலும் சுமந்திரனுக்கு யாழ்ப்பாண முஸ்லிம்கள் வாக்களித்திருந்தனர். இந்த சுமந்திரன் யாழ் முஸ்லிம்களுக்கு என்ன செய்தார்? எத்தனை வீடுகளைக் கட்டிக் கொடுத்தார்?
முஸ்லிம்களுக்கு வீடுகள் தேவைப் படும் போது காணிகள் தேவைப்படும் போது அவற்றை செய்து கொடுக்காது, பாடசாலைக் கட்டிடங்களையும் மைதானத்தையும் அபிவிருத்தி செய்வதில் எந்த யதார்த்தமும் இல்லை.
எப்போது எதிர் கட்சியில் அதிகாரங்கள் இல்லாமல் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளால் தமிழர்களுக்கே ஒன்றும் செய்யமுடியவில்லை.
ReplyDeleteஇந்திய உதவியினாலும், சர்வதேச அழுத்தம் காரணமாக அரசாங்கத்தினாலும் மட்டுமே தான் தமிழர்களை மீழகுடியேற்றப்பட்டார்கள்.
அரசாங்கத்தில் போய் எப்போதும் போய் ஒட்டிக்கொண்டிருக்கும், பணத்திற்க்காக அரசுக்கு வாக்களிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்
MAHINDA ARASHU, MEELKUDIYETRA AMAICHARAKA RISHADAI NIAMITHU, 1300 EKAR KAANI RISHADUKKU KODUTHAHU, MEELKUDIETRUVATHARKAAKA,
ReplyDeleteVEEDUKAL KATTIKODUKKA, PETTAH VIYAAPARIKALIDATHIL RS, 8 KODI PANAM SHERTHATHU,
KAANIKKUM, PANATHUKKUM ENNA NADANDUTHU.
இலங்கையை விற்றுப் பிழைப்பு நடத்தி, வயிறு வளர்க்கும் அஜன்களுக்கு தெளிந்த சிந்தனை ஒரு போதும் ஏற்படாது.
ReplyDelete