நாட்டை முடக்குவதில்லை என அமைச்சரவை தீர்மானம் - சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவிப்பு
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவதில்லை என தீர்மானித்துள்ள அமைச்சரவை வழமையான பொருளாதார நடவடிக்கைகள் தொடருவதற்கு அனுமதிப்பது எனவும் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் கொரோனா வைரஸ் நிலையினைஆராய்ந்துள்ள அமைச்சரவை நாட்டை முடக்குவதில்லை என தீர்மானித்துள்ளது.
சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வழமையான பொருளாதார நடவடிக்கைகள் தொடருவதற்கு அனுமதிப்பது எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து அமைச்சரவை ஆராய்ந்ததுடன் ஜனாதிபதி இது குறித்து அமைச்சர்களிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த முறையை விட இம்முறை வைரஸ் வேகமாக பரவுகின்றது என அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் மக்கள் வாழ்வதே சிறந்ததீர்வு என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
Post a Comment