Header Ads



மேல் மாகாணத்தை விட்டு, வெளியேறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் மேல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்று விடுதிகளில் தங்கியிருக்கும் நபர்கள் தொடர்பில் தகவல்களை சேகரிக்கும் நோக்கில் விஷேட செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் விதிப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிலர் பொலிஸ் பொலிஸாரிற்கு அறிவிக்காமல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

குறித்த நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் திங்கட் கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் கொழும்பிற்கு மீண்டும் வருகையில் வௌியில் சென்ற விதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. கொரோனாவை மறைத்த போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று மக்கள் பார்க்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.