Header Ads



கோட்டாபய - மஹிந்த அரசு கோழைத்தனமானதல்ல, இலங்கையின் மீது பொம்பியோ அழுத்தம் பிரயோகிக்கவில்லை.


மெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்த போது தாம் எவ்வித பதற்றமும் அடையவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் -29- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் ரீதியாக அநாதைகளாகியுள்ள சஜித் தரப்பும், ஜே.வி.பியும் பொம்பியோவின் விஜயத்தின் போது பெரிதும் பதற்றமடைந்த போதிலும் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை.

நாட்டின் ஆட்சியாளர் முதுகெலும்புடைய தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர் என்றால், உலக வல்லரசு என்றாலும் அழுத்தங்களை பிரயோகிக்காது.

ரணில் விக்ரமசிங்க போன்ற கோழைகள் ஆட்சியில் இருந்திருந்தால் பொம்பியோவின் விஜயத்தின் போது பதற்றமடைந்திருக்க வேண்டும்.

ஏனெனில் உலக வல்லாதிக்க நாடுகளின் தாளத்திற்கு இவ்வாறான கோழை ஆட்சியாளர்கள் ஆடக்கூடியவர்கள்.

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட இந்த அரசாங்கம அவ்வாறு கோழைத்தனமானது அல்ல.

நாட்டின் இறைமை, பௌதீக ஒருமைப்பாடு என்பன குறித்து மிகுந்த கரிசனையுடைய அரசாங்கம்.

பொம்பியோ இந்தியா மீது பிரயோகித்த அழுத்தங்களைக்கூட இலங்கையின் மீது இந்த விஜயத்தின் போது பிரயோகிக்கவில்லை.

இதற்கு ஜனாதிபதி கோட்டபாயவின் தைரியமிக்க ஆட்சியே காரணம் என தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. all agreement already finished , don barking

    ReplyDelete
  2. வரலாற்றிலேயே ஆண் ஒரு பெண்ணாக மாறிய சந்தர்ப்பம் இது.

    ReplyDelete

Powered by Blogger.