பொது மக்கள் தேவைக்கு அதிகமாக, பொருட்களைக் கொள்வனவு செய்வதை தவிர்க்க வேண்டும்
பொது மக்கள் தேவைக்கு அதிகமாகப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை முதலில் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொவிட்-19 கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், அரச சேவையினை சீராக முன்னெடுக்கவும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துகிறது.
இந்நிலையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மக் கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒரு சில பிரதேசங் களில் மக்கள் பொறுப்பட்ட விதமாகச் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
மீண்டும் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் படும் என்ற தவறான வதந்திகளுக்கு முக்கியத் துவம் கொடுத்து பொது மக்கள் தேவைக்கு அதிகமாகப் பொருட் களை கொள்வனவு செய்கிறார்கள். இவ்வாறான செயற் பாடுகளை முதலில் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
வசதி படைத்தோர் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது சாதாரண மக்களைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களைத் தேவைக்கு மேலதிகமாக கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் ஏதும் கிடை யாது. அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பிள்ளைகள் மூவரும் பெற்றோரும் உள்ள குடும்பத்துக்கு 2500 ரூபாவுக்குப் போதுமான உணவுப் பொருட்கள் கொள்வனவு செயதால் அது ஒரு மாதகாலததுக்குப் போதுமானது என இவரால் பலவருடங்களுக்கு முன்பே உறதி செய்யப்பட்டுவிட்டது. அதன்படி மக்கள் நடந்து கொண்டால் கொரோனா தொற்றில் இருந்து தவிர்ந்து கொள்ளலாம் எனக்கூறபபடுகின்றது.
ReplyDelete