Header Ads



பல தரப்பினர் இலங்கையை மோதல் களமாக மாற்ற விரும்புகின்றனர் – வெளிவிவகார செயலாளர்


நடுநிலையான வெளிவிவகார கொள்கையிலிருந்து விலகமுற்பட்ட ஒவ்வொரு வேளையும் இலங்கை தோல்வியைசந்தித்துள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இந்தியா சீனா ஐரோப்பியநாடுகள் உட்பட உலகின் வலுவான நாடுகளின் செல்வாக்கின் மையத்தில் இலங்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பல தரப்பினர் இலங்கையை மோதல் களமாக மாற்ற விரும்புகின்றனர் அதனை நாங்கள் தவிர்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அணிசேரா நாடாகவே நீடிக்கவிரும்புகின்றோம் நாங்கள் பக்கச்சார்பற்ற நாடாக நீடிக்க விரும்புகின்றோம்,நாங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கான விளையாட்டிலிருந்து விலகியிருக்க விரும்புகின்றோம்,நாங்கள் அதில் சிக்க விரும்பவில்லை என வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார கொள்கையிலிருந்து விலகிய ஒவ்வொரு தருணமும் இலங்கை தோல்வியடைந்துள்ளது,அதன் முன்னேற்றம் குறைவடைந்துள்ளது, நாடு உள்நாட்டு மோதல்களில் சிக்குண்டுள்ளது என வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒருநாட்டிற்கு பதில் இன்னொரு நாட்டினை தெரிவு செய்யும் நிலையில் இலங்கையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நீதி செலுத்துங்கள்; நீதி செலுத்தப்படுவீர்கள்.

    ReplyDelete
  2. ௭மது ௮ரசியல்வாதிகளின் வாய்களில் இ்ந்த செய்தியைக் கைரைத்து ஊற்றி விட வேண்டும் ❗

    ReplyDelete

Powered by Blogger.