Header Ads



பிரான்ஸ் பொருட்களை மொத்தமாக புறக்கணியுங்கள், இஸ்லாமியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டால் குரல் கொடுக்க வேண்டும் - எர்டோகன்

இஸ்லாம் தொடர்பில் பிரான்ஸ் எடுத்துள்ள கடும்போக்கு நடவடிக்கைக்கு எதிராக, அந்த நாட்டுப் பொருட்களை மொத்தமாக புறக்கணிக்க வலியுறுத்தி துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயீப் எர்டோகன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி நேரலையில் பேசிய ஜனாதிபதி ரிசெப் தயீப் எர்டோகன், பிரான்சில் குடியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டால், கண்டிப்பாக உலக நாடுகளின் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும், இஸ்லாமியர்களை பாதுகாக்கும் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

கடும்போக்கு இஸ்லாத்திற்கு எதிராக மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதாக உறுதியளித்ததற்காக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை எர்டோகன் கோபமாக விமர்சித்துள்ளார்.

இதனிடையே, துருக்கிய தலைவர் எர்டோகன் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்கும்படி அரேபிய தலைவர்களுக்கும் தமது கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த நிலையில் கட்டார் மற்றும் குவைத் நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இருந்து பிரெஞ்சு பொருட்களை அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டுமின்றி எஞ்சிய வளைகுடா நாடுகளிலும் இது தொடர்வதாக தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.