கர்ப்பிணி, பிரசவத்திற்குப் பின்னரான தாய்மார்களுக்கான முக்கிய அறிவித்தல்
இந்த தாய்மார்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு எடுப்பதில் சிரமம், கர்ப்ப பை வாய் குழாய் ஊடான இரத்த போக்கு, திரவ போக்கு, குழந்தை துள்ளுதல் தொடர்பான உணரும் ஆற்றல் குறைவு, மயக்கம், உணர்விழந்த தன்மை, தலைச்சுற்றுதல், உடல் குலுக்கம், உடம்பு வீக்கமடைதல், அதிக இரத்த அழுத்தம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின், உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறு குடும்ப சுகாதார பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுவதுடன் எந்த காரணத்தை கொண்டும் இதில் தாமதம் ஏற்படகூடாது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோய்வாய்க்கு உட்படும் தாய்மார்களுக்கு தேவையான சிகிச்சையை 24 மணித்தியாலங்களும் வழங்குவதற்கு அனைத்து அரச வைத்தியசாலைகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறிப்பு புத்தகத்தை அவசரகால அனுமதி பத்திரமாக கருதப்படும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எத்தகைய சந்தர்ப்பத்திலும் அல்லது பிரச்சினையை எதிர்நோக்கப்படும் பொழுதும் பிரதேச குடும்ப சுகாதார சேவை அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அல்லது சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் 1999 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும்.
எத்தகைய நோய் சந்தர்ப்பதிலும் 1990 என்ற தொலைபேசி இலக்க சுவசெரிய அம்புலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று இந்த அறிக்கை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார அலுவலகத்தின் தாய்சேய் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Post a Comment