Header Ads



அடுத்த வருடம்தான் UNP க்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார்



ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்தத் தலைவர் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கட்சியின் சட்டச் செயலாளர் சட்டத்தரணி நிஷங்க நாணயக்கார இதனை கூறியுள்ளார்.


தற்போது வெற்றிடமாகியுள்ள பிரதித் தலைவர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்க முதலில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அவ்வாறு நியமிக்கப்படும் நபர், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.


இந்த நிலையில், பிரதித் தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இறுதி தீர்மானம் மேற்கொள்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 03 மணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. What a Mess the UNP is in. The Party Can't Decide on a Nominee for the National List, Nor can it appoint a New Leader more than One month after its Crushing Defeat at the Parliamentary Elections. Any Leader of any Party would have Resigned Immediately after the Elections. But Not Ranil, the man who has taken the Party Downhill and Completely Messed up the Wonderful Opportunity he got in 2015 to take the Party to Greater Heights.

    What is he waiting for? Does he want to hang on as Leader of the UNP till there is No One left in the Party? Shame on you Ranil. Go, Go, Go, Soon without Accumulating SHAME on you.

    ReplyDelete
  2. ஐதேக எஞ்சியிருப்பது கேவலமும் அவமானமும், வெட்கம் கெட்ட உறுப்பினர்களும் மட்டும்தான்.

    ReplyDelete
  3. ரணில் அரசியலில் இருக்கும் வரை UNP பற்றி பேசுவதை தவிர்ப்போம் U N P என்ன முஸ்லிம்களின் பாரம்பரிய சொத்தா , அதை விட்டு புதிய கட்சியை சீரமைப்போம்

    ReplyDelete

Powered by Blogger.