கூட்டணியில் இணையுமாறு UNP க்கு, ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு
பரந்துபட்ட கூட்டணியில் இணையுமாறு ஐக்கியதேசிய கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியின் பிரதிதலைவராக நியமிக்கப்பட்டுள்ள ருவான் விஜயவர்த்தனவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியை பரந்துபட்ட கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ருவான் விஜயவர்த்தன பிரதிதலைவர் மாத்திரமே என்பதால் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை என ரஞ்சித்மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் கட்சியின் தலைவரான பின்னரே உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மாகாணசபை தேர்தலின்போதுஇணைந்து செயற்படமுடியும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment