UNP, SJB பேச்சுவார்த்தையில் முறுகல் - சஜித்திற்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் கலந்துரையாடல் நிறுத்தம்
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றிற்கு இடை யே ஒரு கூட்டணி அமைப்பதற்காக மேற்கொண்ட கலந்துரையாடலில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
இரு கட்சிகளிலும் உள்ள குழுக்களின் எதிர்ப்பு காரணமாகக் குறித்த கலந்துரையாடல் இடை நிறுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடல்களில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கலந்து கொண்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரை சந்தித்து திஸ்ஸ கலந்துரையாடியுள்ளார்.
இருப்பினும் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு தெரிவித்தமையால் கலந்துரையாடல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
Post a Comment