நீதி அமைச்சருடன், அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு
நீதித்துறை கட்டமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பில், நீதி அமைச்சருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெனா பி ரெப்ளிஸ், நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை, அமைச்சில் வைத்து இன்று சந்தித்தார்.
இதன்போது, நீதித்துறை, அதனுடன் தொடர்புடைய பொறுப்புகள் மற்றும் எதிர்கால திட்டமிடல்கள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நீதி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் தேக்க நிலையில் உள்ளமை, நீதித்துறை கட்டமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடி நிலைமை, நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்குதல் என்பன தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Do Sri lankan ambassador in US, meet American ministers in this way to advice or discuss them, how to do their work?
ReplyDeleteAll foxes are crying for sheep. Trying to interfere in our country local politics and put pressure to achieve their targets.