இலங்கை தொழிலாளர்கள் நாட்டைவிட்டு, வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் சவூதி அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக விசா செல்லுபடியாகும் காலகட்டத்தில் நாட்டை விட்டு வெளியேற முடியாத இலங்கை தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எந்த கட்டணமும் அல்லது அபராதமும் அறவிடப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிகார அமைச்சு இதனை கூறியுள்ளது.
செல்லுபடியாகும் அல்லது காலாவதியான விசாக்கள், மீள் நுழைவு விசாக்கள் அல்லது இறுதி புறப்படும் விசாக்கள் உட்பட அனைவருக்கும் இந்த சலுகை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் இலங்கை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமையைக் கருத்தில் கொண்டு சவூதி அரசு இந்த தற்காலிக நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய அரசாங்கத்தின் இந்த முடிவு தற்போது திருப்பி அனுப்பப்படும் இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முடிவு இரு நாடுகளுக்கிடையில் தற்போது நிலவும் வலுவான இருதரப்பு உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
அத்துடன், இலங்கை வெளியுறவு அமைச்சகத்துக்கும், ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கும் இடையே சவூதி அதிகாரிகளுடனான செயலில் உள்ள உறவை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Post a Comment