மாடுகள் அறுப்பதை நிறுத்தினால்..?
(அய்மன் அம்மார்)
பௌத்த இனவாதிகளின் மற்றுமொரு நவீன கண்டு பிடிப்பும், குற்றச்சாட்டும் என்னவென்றால், இலங்கை முஸ்லிம்கள் மாடுகளை இறைச்சிக்காக அறுக்கின்றனர் என்பதாகும்.
உண்மையில் மாட்டிறைச்சியையோ அல்லது ஏதாவது மாமிசங்களையோ உணவாகக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் ஒரு போதும் கட்டாயப்படுத்தவில்லை. அதே போன்று, மாட்டிறைச்சியையோ அல்லது வேறு ஏதாவது மாமிச உணவுகளையோ உண்ணத் தவறுபவர்கள் குற்றவாளிகள் என்றும் இஸ்லாம் போதிக்கவில்லை. எனினும் எக்காலத்துக்கும் எச்சூழலுக்கும் பொறுத்தமான போதனைகளையே இஸ்லாம் முன்வைத்துள்ளது.
பாலை வணங்களில் வசிப்போர், காடுகளில் வசிக்கும் வேடர்கள், ஐஸ் மழைகள் கொட்டும் நாடுகளில் வசிப்போர்களைப் பார்த்து, மரக்கறிகளையே உண்ண வேண்டும், மாமிசங்களை உண்ண வேண்டாம் என்று அர்த்தமற்ற, பொறுத்தமற்ற போதனைகளை இஸ்லாம் போதிக்க வில்லை.
அப்படிப் பனித்திருந்தால் இஸ்லாம் எக்காலத்துக்கும் பொறுத்தமானது என்ற வாதமும் பொய்யாகிவிடும்.
அப்படியாயின் நவீன கால பௌத்த இனவாதிகள் மாடுகளை அறுப்பதை தடுக்க வேண்டும் என்று தென் மாகாணத்தில் இருந்து கொழும்பு வரை பாத யாத்திரை மேற்கொண்டமை, மாடுகள் ஏற்றும் வாகணம் ஒன்றை தீயிட்டமை, இறைச்சிக் கடைகளைத் தகர்த்தமை போன்ற செயற்பாடுகள் எதனைக் குறிக்கின்றன? இவை உண்மையில் காழ்ப்புணர்சியும், இன வெறியுமேயாகும் என்பதையே குறிக்கின்றன.
இத்தகைய இனவெறியர்களுக்கு நமது உண்மையான நிலைப்பாட்டையும், சகவாழ்வுக்குச் சாத்தியமான வழிகள் என்ன என்பதையும் சிந்தித்து செயலாற்றுவதும் எமது சமூகப் பொறுப்பாகும்
அந்த அடிப்படையில் எனது பின்வரும் கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.
01- மாடுகள் வளர்ப்பதையும் அவற்றை விற்பதையும் தொழிலாகக் கொண்டவர்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த கிராமவாசிகளேயாவர். நாம் மாடறுப்பதை நிறுத்தினால் அவர்களது வாழ்வாதாரமே பெரிதும் பாதிக்கப்படும், அப்பொழுது அவர்களே இனவாதிகளுக்கு எதிராக வீதியில் இறங்கும் சந்தர்ப்பம் வெகு கடுதியாக ஏற்படுமல்லவா?
02- மாடுகள் அறுப்பதை நாம் நிறுத்தினால் கட்டாக்காளி மாடுகளின் தொல்லைகள் வீதியில் வந்து நிறையும், அது சூழலை பெரிதும் மாசுபடுத்தும். அப்பொழுது அரசாங்கமே மாடறுப்பை ஊக்குவிக்கும் நிலை ஏற்படாதா?
03- நாட்டின் பல பகுதிகளில் நகர சபைகள், பிரதேச சபைகள் மேற்படி மாட்டிறைச்சிக் கடைகளைத் 'டெண்டர்' மூலம் குத்தகைக்கு விடுவதன் மூலம், கோடிக் கணக்காக ரூபாய்களை ஈட்டிக்கொள்கின்றன. மாடறுப்பதை நாம் நிறுத்தினால், பிரதேச சபைகளுக்கும் நகர சபைகளுக்கும் கோடிக்கணக்காக ரூபாய்கள் நஷ்டங்கள் ஏற்படும். அப்பொழுது அச்சபைகளே மாடறுப்பை கண்டிப்பாக ஊக்குவிக்கும் அல்லவா?
04- மிருகக் காட்சிச் சாலைகளில் உள்ள சிங்கம், புலி போன்ற மிருகங்கள் மரக்கறிகள் சாப்பிடுவதில்லை. புலி பசித்தாலும் புல் திண்ணாது என்பார்கள். எனவே, இவற்றுக்காக மாடுகள் அறுக்க வேண்டிய கட்டாயத் தேவையில் அரசு உள்ளதல்லவா
05- இராணுவ வீரர்கள், படைப்பிரிவினருக்கு உணவு வழங்கும் போது, அவர்களுக்கும் மாமிச உணவே கொடுக்க வேண்டிய தேவையில் பாதுகாப்பு அமைச்சு உள்ளதல்லவா? அத்Nதைவையை எப்படி சமாலிக்கும்?
06- மேற் கூறப்பட்ட விடயங்களை சிந்தித்து, சாதித்து பெரும்பான்மை இன வெறியர்களுக்குப் பாடம் புகட்ட, எமது இறைச்சிக் கடை வியாபாரிகள் சற்று விட்டுக் கொடுப்புடன் தற்காலிகமாகவேணும் வேறு ஒரு தொழிலை மேற்கொள்ள முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.
07- எல்லாத் பௌத்தத் தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து, பெற்றோலை ஊற்றித் தீக்குளித்தாலும், விலங்குகளை அறுப்பதை நிறுத்த முடியும் என்று நான் நினைக்க வில்லை என்று முன்னாள் ஹெல உறுமய கட்சியின் தலைவரும் அதன் தாபகருமான சங்கைக்குரிய மேதானந்தா தேரர் குறிப்பிட்டிருந்தமையும் நினைவு படுத்தப்பட வேண்டிய அருமையான ஒரு கருத்தாகும்.
இவ்விடயங்களை சிந்தித்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் திறந்த உளத்துடன் கலந்துரையாடி ஒரு தீர்வுக்கு வருவோமேயானால், இனவாதிகளின் அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களை குப்பையில் போடலாம். (இன்ஷா அல்லாஹ்). அல்லாஹ்வே போதுமானவன்.
18.07.2013 - மீள் கட்டுரை
மாடறுப்பு தொடர்பில்:
ReplyDelete1. மாடறுப்பது முஸ்லிம்கள் மட்டுமல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
2. மாட்டு வியாபாரத்தில் முஸ்லிம்களைவிட கிறிஸ்தவ மற்றும் வேறு சமூக மக்கள் அதிகம் உள்ளனர் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்
3. மாட்டிறைச்சி உண்பதிலும் முஸ்லிம்களைவிட ஏனையவர்கள் எண்ணிக்கையில் அதிகம். அத்துடன் பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் விசேடமாக மத்திய கிழக்கில் மாட்டிறைச்சி மிகமிக அரிது என்பதையும் கவனிக்க வேண்டும்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் சத்தமில்லாமல் இருக்கும்போது, மார்க்கம் போன்று ஏன் தலையிலடித்துக் கொள்ளவேண்டும்?
Why only beef is going to be banned ? What about other animals used fer meat. I think there is a business purpose behind this.
ReplyDeleteசில வருடங்களுக்கு முன் ஜிம்பாபே அதிபர் ராபர்ட் முகாபேயின் பிறந்த நாளின் போது யானை இறைச்சி, இம்பாலா மானின் இறைச்சி போன்றவை பரிமாறப்பட்டதில், அது சரி அல்லது தவறு என்று சொல்ல நாம் யார்? அது அவர்களது உணவுப்பழக்கம். சீனர்கள், ஜப்பானியர்கள் பாம்பு சூப்பை விரும்பிக் குடிப்பதால் என்னக் குறைந்து போய்விட்டார்கள்? தமிழ்நாட்டில் மீன் அசைவமாக இருக்கும்போது மேற்கு வங்காளத்தில் அது சைவமாகப் பட்டியலில் உள்ளது அது அவர்கள் கலாச்சாரம்.
ReplyDeleteவேதக் காலத்தில் மாட்டிறைச்சி என்பது அனைவராலும் உண்ணப்பட்டது. கோமாதாவில் 30 முக்கோடி தேவர்கள் வாழ்கின்றார்களே என்று அன்று யாரும் கவலைப்படவில்லை. அனைவரும் உண்டனர். பின்னாளில் எண்ணங்கள், நம்பிக்கைகள் மாறுமேயானால் அது அவர்களோடு! ஏன் மற்றவர்களின் மீது நம் உணவுப் பழக்கத்தை திணிக்க வேண்டும்?
அமெரிக்காவின் தேசிய உணவே மாட்டிறைச்சியும், உருளைக் கிழங்கும்தான். பிரட்டனுக்கு பெருமளவில் அந்நியச் செலாவணி பெற்றுத்தருவது அதன் மாட்டிறைச்சி ஏற்றுமதியல்லவா? பிசாவாகவும், பர்கராகவும், ஹாட் டாக் ஆகவும் கோமாதாக்கள் மாற்றப்படும்போது, அதைக்கண்டு பொங்காமல், அந்நாடுகளின் செலாவணிகளை உச்சத்தில் வைத்திருப்பதும், அதை தெய்வமாகப் போற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பத்துப் பைசாவிற்கு உபயோகமற்றதாக கேவலப்படுத்தும் கோமாதாக்களின் செயலைக் கண்டு, எப்பாறையில் முட்டிக்கொண்டு அழுது ஒப்பாரி வைப்பது?
சாய்னா நெய்வால் மட்டும் தயிர் சாதமும் மாவடுவும் சாப்பிட்டிருப்பாரேயானால் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்திருக்குமா? அவர் பயிற்சி பெறும் கோபிசந்த் அகாடமியின் உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சி கட்டாயம். அது ஏன்? திடகாத்திரமாக மணிக்கணக்காக பேட் மின்டன் விளையாடவும் எதிரணி வீராங்கனைகளின் உணவுப்பட்டியலில் என்ன என்ன உள்ளது என்று பார்த்துப் பார்த்து விஞ்ஞானப் பூர்வமாக தம் அகாடமியிலும் அதே போன்று வடிவமைக்கப்பட்ட தினால்தான் இந்தியாவிற்கு பதக்கங்கள் கிடைக்கின்றது.
பன்றி இறைச்சிக்கு அடுத்ததாக அதிக கலோரி சத்துள்ள இறைச்சி மாட்டிறைச்சி. சென்னை சானடோரியம் நெஞ்சக நோய் மருத்துவமனையின் மருத்துவர்கள் நோயிலிருந்து விரைவில் குணம் பெற பரிந்துறைப்பதும் மாட்டிறைச்சியைதான்.
ஏழைகளுக்கு, உழைப்பாளிக்களுக்கு 40 டிகிரி வெயில் மிகக் கடினமான வேலை செய்பவர்களுக்கு, தலையில் 15 செங்கற்களை சுமந்து படியேறும் சித்தாள்களுக்கு ஹார்லிக்சும், போர்ன்விட்டாவும், அப்பிளும் ஆரஞ்சும் வாங்க வக்கற்ற விளிம்பு நிலை ஏழைப்பாழைகளுக்கு சக்தியைக் கொடுப்பது மாட்டிறைச்சிதான்.
இந்தியாவில் மாட்டிறைச்சியை கேவலமாகப் பார்ப்பதால்தான் வருடத்திற்கு 2 லட்சம் குழந்தைகள் ஊட்டச் சத்துப் பற்றாக்குறையால் இறந்து போகின்றன.
காந்தி இந்திய தேசத்தந்தையாக இருக்கலாம், மஹாவீர் சிறந்த ஆன்மிகப் பெரியாராக இருக்கலாம். ஆனால் அவர்கள் பிறந்த நாட்களில் புலால் உண்ணக்கூடாது என்று சொல்வது பல்வேறு தேசிய இனங்கள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்கங்கள் கொண்ட துணைக் கண்டத்தில் அது எப்படி சரியாகும். புலால் உண்பது தவறு என்பது அவர்களின் தனிப்பட்டக் கொள்கை. அதை மற்றவர்கள் மீது திணிப்பது நேர்மையா?
இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பிருக்கும்போது இஸ்லாமியர் அல்லாதவர் நோன்பிருப்பதில்லையே?
மாட்டிறைச்சிக்கு பா.ஜ.க. மத்திய அரசு தடை போட்டது. ஆனால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலி சிங்கங்களுக்கு டி. பிஸ்கட் கொடுப்பார்களா? இந்திய வனப்பகுதிகளில் ஊன் உண்ணிகள் கோமாதா என்று பார்க்குமா? குலமாதா என்று பார்க்குமா? கேலிக்கூத்தாக உள்ளது!!
Copied.............
The Muslims can help the country, and themselves, by finding export markets for the cattle and re-importing the meat to meet local demand. Perhaps, they can be both exporters and importers.
ReplyDelete@Muhandiram: Actually; this is a good idea, and simply executable.
ReplyDeleteஆம் @Lankan: நீங்கள் கடைசியாக உபயோகித்த இரண்டு சொற்களும்தான் உங்கள் கட்டுரைக்கு உயிர் ஊட்டுகின்றது.
ReplyDelete