Header Ads



பொது மக்கள் நிலைவரத்தை மறந்து, சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் நடப்பது பாரதூரமானது


கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இராஜகிரியவிலுள்ள கொரோனா கட்டுப்படுத்தல் தேசிய செயற்பாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் சமூகத்தினுள் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெரும்பாலானவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்படுகிறது. 

எனினும் சமூகத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொது மக்கள் இந்த நிலைவரத்தை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சுதத் சமரவீர , 

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனா கட்டுப்படுத்தலில் இலங்கை சிறந்த மட்டத்திலுள்ளது. மக்களின் ஒத்துழைப்பினாலேயே இதனை எம்மால் பேண முடிந்தது. இந்த நிலைமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த மாதங்களில் சமூகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டார்கள் என்பதை மறக்காமல் அடிப்படை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார். 

1 comment:

  1. “விலக்கப்பட்டவைகளிலிருந்து மக்களைத் தடுப்பவர்களுக்கும் விலக்கியவைகளைச் செய்பவர்களுக்கும் உதாரணம் கப்பலில் சீட்டுப் போட்டுக் கொண்டவர்களைப் போன்றாகும்.சிலர் கப்பலின் மேல் தளத்திற்கும் சிலர் கப்பலின் கீழ்த் தளத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டனர். கீழ்த்தளத்தில் உள்ளவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டால் மேல் தளத்தில் உள்ளவர்களைக் கடந்து செல்ல வேண்டும். அதனால் கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ‘நாம் மேல்தளத்தில் உள்ளவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமல் எங்கள் பகுதியிலேயே ஒரு துவாரத்தை இட்டுக் கொண்டால் என்ன?’ என்று பேசிக் கொண்டனர். மேல்தளத்தில் உள்ளவர்கள் அவர்கள் நாடியபடி செய்ய விட்டு விட்டால் அனைவரும் அழிந்து விடுவர். மாறாக மேலுள்ளவர்கள் தடுத்து நிறுத்தினால் அவர்களும் தப்புவார்கள் மற்றவர்களும் தப்பிப்பார்கள்”
    (புஹாரி)

    ReplyDelete

Powered by Blogger.