நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் வரவேற்பும், புதிய சீருடை அறிமுகமும்
நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு (2020.09.06) நடைபெற்றது. நீண்டகாலமாக பின்பற்றப்பட்டுவந்த இரண்டு பாரம்பரிய முறைகள் மாற்றியமைக்கப்பட்டது
1. தரம் - 9 இல் கல்வி கற்கும் மாணவர்களை உள்ளீர்க்கும் முறை மாற்றப்பட்டு இவ்வருடம் முதல் க.பொ.த. சாதாரண தரத்தில் சித்திபெற்ற மாணவர்களை உள்ளீர்த்தல்.
2. கல்லூரி மாணவர்களின் பாரம்பரிய ஆடையாக இருந்த நீள் ஜுப்பா மாற்றப்பட்டு தேசிய ஆடையும் நீள் காட்சட்டையும் சூவும் அணியும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இவ்வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு கல்லூரி நிருவாக சபையின் தலைவர், கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம். கரீம் (நத்வி) தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மூதூர் பிரதேச சபை தவிசாளர் கௌரவ எம்.எம். அரூஸ் அவர்களும் விசேட விருந்தினர்களாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யாக்கூப் ஜெஸ்மி அவர்களும் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர், மூதூர் கோட்டக் கல்வி அதிகாரி ஜனாப் ஜே.எம். இக்பால் அவர்களும்
விருந்தினராக கட்டை பறிச்சான் கட்டளைத் தளபதி கேர்ணல் மெத்தானந்த சுபசிங்க அவர்களும் கல்லூரியின் நிருவாக மற்றும் பொதுச் சபை உறுப்பினர்களும் கல்லூரியின் ஆசிரியர் குழாம்களும் பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் புதிய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது கல்லூரி சீருடை மாற்றம் தொடர்பான நிருவாகத்தின் புதிய ஆடைக்கான பொதியை கல்லூரி நிருவாகம் சார்பாக அதன் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.டபிள்யூ.எம். றிசாத் (நத்வி) அவர்கள் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம். கரீம் (நத்வி) அவர்களிடம் கையளித்தார்.
நல்ல மாற்றம்
ReplyDelete