Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு குறி, கிழக்கை கைப்பற்ற வியூகம் - ஹட்ரிக் சாதனை படைப்பாரா பஸில்..?


மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றுவதாக சபதமெடுத்து அதற்கான வியூகங்களை பஸில் ராஜபக்ஷ வகுப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்திக் குறிப்பில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கி குறுகிய காலப்பகுதிக்குள் மூன்று தேர்தல்களிலும் ஹட்ரிக் சாதனை புரிந்த பஸிலிடமே மாகாணசபை தேர்தலை நடத்தும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு தவிர்ந்த 07 மாகாண சபைகளையும் இலகுவில் வென்று விடலாமென கணக்கு போட்டுள்ள பஸில் எப்படியாவது கிழக்கிலும் மொட்டு மலர வேண்டுமென உறுதியாக உள்ளார்.

இதற்காக மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை அவர் குறி வைத்துள்ளார்.

மத்தியில் ஆட்சி அதிகாரம் ராஜபக்ஷக்கள் வசம் இருப்பதால் பஸில் விரித்த வலைக்குள் அவர்கள் இலகுவில் சிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.