விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை நீக்கவேண்டும் - நிமால்
நாட்டிற்கு புதிய தேர்தல் முறை அவசியம் என தெரிவித்துள்ள அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா தற்போதைய அரசாங்கம் தனது பெரும்பான்மையை பயன்படுத்தி விகிதாச்சாரபிரதிநிதித்துவ முறையை நீக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
19வது திருத்தத்தை நீக்குவதற்காகவே அரசாங்கம் தேர்தலில் மக்களின் ஆணையை பெற்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக அரசாங்கம் 20வது திருத்தத்தை நிறைவேற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பின் மூலம் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment