Header Ads



கரட் மற்றும் பீட் என்ற புனைபெயர்களை கொண்ட இரண்டு பேர் கைது

போதைவஸ்து பொருட்களை விநியோகிக்கும் கரட் மற்றும் பீட் என்ற புனைபெயர்களை கொண்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவர்களை வழிநடத்தியவர் என்ற கருதப்படும் சூட்டி பபா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் மீரிஹன கடவத்தை வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.


முன்னதாக மஹர மேல் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து கரட் மற்றும் பீட் ஆகியோர் நேற்று மாலை கைது செய்யயப்பட்டனர். இதன்போது அவர்களிடம் இருந்து 2 கிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களை வழிநடத்தும் சூட்டி பபாவிடம் இருந்து 57 கிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டது.


இவர்கள் சிறைக்கைதிகளுக்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


இந்த நிலையில் கைது செய்யப்பட்டபோது சூட்டி பபாவிடம் இருந்து சிறைச்சாலை காவலர் ஒருவரின் உந்துருளியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.