Header Ads



முழு முஸ்லிம்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டு, பயங்கரவாதிகளாக பார்க்கும் நிலை காணப்பட்டது


நல்லாட்சியில் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் கிடைத்த பயன்கள் என்ன? நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்ததா? அதனால் மக்களுக்கு பலன்கள் கிடைத்ததா என நீதி அமைச்சர் அலி சப்ரி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் கொண்டுவரப்படுவதே தவிர ஜனாதிபதியோ அல்லது அவரது குடும்பமோ சொகுசாக அதிகாரங்களுடன் வாழ்வதற்காக அல்ல  என்றும் அவர் தெரிவித்தார். நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டி அரசாங்கம் எல்லாச் சவால்களுக்கும் தைரியமாக முகம் கொடுத்து செயல்படும்.


அமைச்சர்களான அல் சப்ரி, ரோஹித அபேகுணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.


அந் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது,


நாட்டை சீராக ஆட்சி செய்வதில் 19 ஆவது திருத்தச் சட்டம் இடையூராக உள்ளன. அதனை மாற்றி ஜனாதிபதிக்கு வேலை செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.


நாட்டு மக்கள் ஜனாதிபதியையும், அரசையும் தெரிவு செய்தது புத்தகம் எழுதுவதற்கு அன்றி நிறைய வேலைகள் செய்வதற்காகும்.


கடந்த ஆட்சியில் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் கிடைத்த பலன்கள் என்ன? நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்ததா? அதனால் மக்களுக்கு பலன்கள் கிடைத்ததா? 69 இலட்சம் மக்கள் வாக்களித்தும் கூட ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபரை மாற்ற முடியுமா? நாட்டில் குற்றச் செயல்கள் கூடியுள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் எமது சகோதர கத்தோலிக்க மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. முஸ்லிம் பெயரை தாங்கிய பயங்கராத கும்பல் மேற்கொண்ட இக்கொடூர செயலை யாரும் அங்கீகரிக்க முடியாது.


இத்தாக்குதலினால் முழு முஸ்லிம்களுக்கும் அவப் பெயர் ஏற்பட்டதோடு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக பார்க்கும் நிலையும் காணப்பட்டது.


மூவின மக்களும் இந்நாட்டில் ஒற்றுமையாக, பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழவேண்டும் என்பதே ஜனாதிபதியின் ஒரே இலக்காகும் என்றும் அவர் கூறினார்.

4 comments:

  1. ஜனதிபதியும் பிரதமரும் 19ம் திருத்தச் சட்டம் தான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்தது எனக் கூறினால் நீங்களும் அதைத் தான் கூறுவீர்கள்.சிறு வயது திருனணம் தடை செய்யப் பட வேண்டும் என் அவர்கள் கூறுகிறார்கள் அதைத் தான் நீங்களும் கூறுகிறீர்கள்.எதிர்த்துப் பேச முடியுமா?முடியாது.உங்களால் புதியாய் ஒன்றும் பன்ன முடியாது

    ReplyDelete
  2. அமைச்சர் அவர்களே, நல்லாட்சியில் குற்றச்செயல்கள் அதிகரித்தது உண்மைதான் . முஸ்லிம்கள் மீது அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டதும் உண்மைதான் . அவற்றை எல்லாம் நல்லாட்சியினால் தடுக்கமுடியவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் இவற்றை எல்லாம் யார் பின்னின்று நடத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். இவ்வாறான குற்றச்செயல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் யாவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின் உடனே எவ்வாறு அடங்கியது என்பதையும் சற்று சிந்திக்க வேண்டும். இவ்வாறான செயல்களுக்கான பின்புலங்கள் என்னவென்று முஸ்லிம்களுக்கு தெறியாமல் இல்லை. இவர் முஸ்லிம்கள் காதில் பூ சுத்தப்பார்கிரார் .

    ReplyDelete
  3. So, the Yahapalana (Good Governance) failed because of 19A and by enacting 19A,the Yahapalana people stabbed themselves in their backs. And all but one of the 225 MPs supported it including those UPFA MPs who are in the new Govt. of which you are a part. Why did your fellow travellers, during the Yahapalana Govt., support 19A? Don't tell us that they were so clever that they knew that 19A will finish off the Yahapalana and that's why they voted in favour. Now, your friends who voted in favour of 19A want it removed because they know your SLPP will meet the same fate as the Yahapalna if 19A is Not repealed!

    You think ONLY you have brains while those who oppose you don't have any! Don't be silly, man.

    ReplyDelete

Powered by Blogger.