MIM ஜிபீன், சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்
யாழ்ப்பாணம் சோனக தெருவை பிறப்பிடமாகவும் தற்போது புத்தளம் தில்லையடியை வசிப்பிடமாகவும் கொண்ட எம். ஐ.எம்.ஜிபீன் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பாக சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் திருகோணமலை இந்துக் கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரும், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மின் தொழில் நுட்பவியல் டிப்ளோமா பட்டதாரியும் ஆவார்.
தற்போது நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்சார அத்தியட்சகராக பணிபுரியும் இவர் அகில இலங்கை சமாதான நீதவானும், ஓய்வு பெற்ற கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.எம்.இக்பால், கதீஜா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும் ஆவார்.
Congratulations Jiffin
ReplyDelete