அரசின் முன்னெடுப்புகளுக்கு நாட்டு, மக்கள் ஒத்துழைப்பு வழங்குவது கட்டாயம் - சிலோன் தௌஹீத் ஜமாத்
இலங்கை தௌஹீத் ஜமாத் தலைமையகத்தில் அமைப்பின் தலைவர் எம்.எ.எல்.எம் ரிஸான் தலைமையில் இன்று -08- நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசு பொறுப்பெடுத்தவுடன் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் அரசின் இந்த முன்னெடுப்புகளுக்கு நாட்டு மக்களாகிய அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது கட்டாயமாகும்.
போதைப் பயன்பாடு தான் அனைத்து குற்றச்செயல்களுக்கும் அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றது. போதையுடன் தொடர்புடையவர்கள் கொலை, கொள்ளை, சிறுவர் துஷ்பிரயோகம் என அனைத்து விதமான குற்றச்செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள்.
இவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதுடன் மாத்திரம் குற்றச்செயல்களை தடுத்து விட முடியாது. மாறாக, போதைப்பயன்பாட்டின் விளைவுகள், தீமைகள் தொடர்பில் அனைத்து சமூக மட்டத்திலும் விழிப்புணர்வுகளை முழுமையாக உண்டாக்க வேண்டும்.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு தொடர்பாக பொதுமக்களை விளிப்பூட்டும் வகையில் நாடு முழுவதும் செப்டெம்பர் மாதம் முழுவதும் இந்த பிரச்சாரத்தை அமைப்பு மேற்கொள்ளவுள்ளதுடன் ,தேவைப்பட்டால் மேலும் இதன் கால அளவை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள சிவில் அமைப்புகள், இயக்கங்கள், பள்ளிவாயல்கள், பௌத்த மத்திய நிலையங்கள், கோவில் மற்றும் கிருத்தவ தேவாலயங்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.
தமிழ், சிங்கள மொழியில் நாட்டின் பல பாகத்திலும் இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கும் அதேவேளை அனைத்து இன, மத மக்களையும் இந்த பிரச்சாரம் சென்றடையும் வகையில் பாரிய அளவில் இதனை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
இதற்காக அரச அமைப்புகள், பாதுகாப்பு துறையினரின் உதவிகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளோம் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆர். அப்துர் ராசிக் , சிங்கள மொழியிலும் அமைப்பின் துணை தலைவர் எம்.எப்.என் ரஸ்மின் மற்றும் தமிழ் மொழியிலும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
MAADU ARUPPATHAI THADAI SHEIYA
ReplyDeletePOKIRAARKAL.
CTJ IN NILAIPAAU ENNA??
இலங்கை முஸ்லிம்களுக்கு எல்லாவகையான பிரச்சினைகளுக்கும் மூல காரணம் இந்த புகைப்படத்தில் இருக்கும் குழு தான்.
ReplyDelete