Header Ads



தற்போதைக்கு பாராளுமன்றம் செல்லப்போவதில்லை - பசில்



தற்போதைக்கு நாடாளுமன்றம் செல்லப்போவதில்லை என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர் இது குறித்த திட்டம் எதுவும் தற்போது இல்லை என தெரிவித்துள்ளார்.

நான் தற்போது உள்ள நிலை குறித்து எனக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் நாடாளுமன்றம் செல்வதற்கான உடனடி திட்டங்கள் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

19வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவேளை பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்கள் அதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் 20வது அமர்வு முன்வைக்கப்படும் என்பதன் அடிப்படையிலேயே அவ்வேளை ஆதரவு வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்படுவதை நியாயப்படுத்தியுள்ள பசில் ராஜபக்ச மக்கள் அதற்கான அதிகாரத்தை அவருக்கு வழங்கியுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.