கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு, ஓர் அன்பான வேண்டுகோள்
அன்பின் கண்டி மாவட்ட முஸ்லிம்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்
எமது இலங்கைத் திரு நாடு எமக்குப் பல்வேறு இலவச சேவைகளை வழங்குகிறது.அவற்றில் மருத்துவ சேவை பிகப் பிரதானமாகக் காணப்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு மருத்துவ சேவைகளை நாம் இலவசமாப் பெறுகிறோம்.
நாடு எமக்குச் செய்கின்ற உதவிகளுக்கு ஏதாவது பிரதி உபகாரம் செய்வது இந்த நாட்டு மக்களாகிய எமது கடமையாகும்.அந்த அடிப்படையில் அத்தகைய ஒரு உபகாரத்தினைச் செய்வதற்கு ஒரு அரிய சந்தர்ப்பம் எமக்குக் கிட்டியுள்ளது.
கண்டி மற்றும் பேராதனைப் போதனா வைத்தியசாலைகள் எமது மாவட்டத்தில் அமையப் பெற்றிருப்பது இறைவன் எமக்குத் தந்த ஒரு அருட்கொடையாகும்.
கேகாலை, கண்டி,பதுளை ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் இருதய நோயாளிகள் கண்டி வைத்தியசாலை இருதய நோய்ப் பிரிவில் மாத்திரமே சிகிச்சை பெற வேண்டிய நிலை காணப்படுகிறது.
இதனால் இருதய சத்திர சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய ஒரு நோயாளி மூன்று வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
எனவே பேராதனை வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சைக் கூட கட்டட நிர்மாணத்தை பூர்த்தி செய்வதன் மூலம் நோயாளிகள் காத்திருக்கும் காலத்தைக் குறைக்க முடிவதோடு சிகிச்சைகளை விரைவுபடுத்தவும் முடியும்.
12000 சதுர அடிப் பரப்பில் ரூபா 70 மில்லியன் செலவில் அமைய இருக்கும் இந்தத் திட்டத்தை ஸம் ஸம் பவுண்டேஷனின் வழிநடாத்துதலோடு கண்டி மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா,கண்டிக் கிளை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் කන්ද උඩරට முஸ்லிம்களின் சங்கம் முன்னெடுக்கிறது.
சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்கி நாட்டின் சுகாதார முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்போம்.நோயாளிகளுக்கு உதவும் இந்த நிரந்தர தர்மத்தில் பங்கு கொண்டு இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வோம்.
வங்கிக் கணக்கு விபரம்
Account name: Zam Zam Foundation (Guarantee) limited
Account no :1106011898
Bank: Commercial Bank
Branch: Bambalapitiya
Swift Code: CCEYLKLX
Account name:
Zam Zam Foundation (Guarantee) limited
Account Number 0075394595
Bank: BOC
Branch: Islamic Banking Unit
Post a Comment