முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு விஷேட சலுகை
பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்காக அதிகளவான இடத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நான்கு ஒழுங்கைகள் உள்ள வீதியில் இடது பக்கத்தில் உள்ள இரண்டு ஒழுங்கைகளும் பேருந்து, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று ஒழுங்கை உள்ள வீதிகளில் இரண்டாவது ஒழுங்கையின் ஊடாக பேருந்துகளை முந்திச் செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏனைய வாகனங்களுக்கு போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியுமாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Govt should develop rhe road system.otherwise nothing happend.
ReplyDelete20million people 35million vechile.good srilanka