கப்பலின் தீ பரவலை கட்டுபடுத்தியோருக்கு, ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
எம்.டி.நியூ டயமன் கப்பலின் தீ பரவலை கட்டுபடுத்தியமைக்காக இலங்கை, இந்திய கடற்படை உள்ளிட்ட குழுவனருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்த பதிவில்,
எம்.டி.நியூ டயமன் கப்பலின் தீ பரவலை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர தங்கள் உயிரைப் பணயம் வைத்து செயற்பட்ட இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படை ஆகியவற்றுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அத்துடன் கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் அவர்கள் மேற்கொண்ட பணியை தான் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Post a Comment