ஜனாதிபதி ஆணைக்குழு முன், ஆஜராகினார் ஹிஸ்புல்லா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆஜராகியுள்ளார்.
இன்று (07) காலை 9 மணியளவில் அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் இன்று அவரை ஆஜராகுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பிற்கு அமைய அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.
Post a Comment