கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் கொரோனா
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கைதி ஒருவருக்கும் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த இருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3121 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் பூரணமாக குணமடைந்து வீடு திருப்பியவர்களின் எண்ணிக்கை 2918 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது 191 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment