ரம்சி ராசீக்குக்காக கட்டணமின்றி, ஆஜரான சுமந்திரன்
ஏப்ரல் மாதம் திடீரெனெ இவருக்கு முகநூல் மற்றும் பிற வலைத் தளங்களூடு மிரட்டல்கள் விடுக்கப்படத் தொடங்கின. சமூக வலைத்தளங்களில் எழுதுவதை நிறுத்திய ராசீக், தன் குழந்தைகளைக் குறித்தும் பயமடையத் தொடங்கினார்.
ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இவர் பொலீஸாரிடம் தனக்கு விடுக்கப்படும் மிரட்டல்களைக் குறித்து முறையிட்டார். ஆனால், இந்த மிரட்டல்களைக் குறித்து விசாரணை செய்யாமல் பொலீஸார் ராசீக்கைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுநீரகப் பாதிப்பு, மூட்டு அழற்சி, ஈரல் சிக்கல்கள், காலில் காயங்கள் என ராசீக் பல வித நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இப்படியிருந்தும், இவருக்கு பிணை வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீண்டதோர் போராட்டத்தின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் இவருக்கு இன்று பிணை வழங்கியது. ஐந்து மாதங்களின் பின்னர் ராசீக் தன் குடும்பத்தோடு மீள இணையவுள்ளார்.
எம். ஏ. சுமந்திரன் ராசீக்கிற்காக நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
அதேவேளை ரம்சி ராசீக்குக்காக கட்டணமின்றியே சுமந்திரன் ஆஜரானதாக மற்றுமொரு சட்டத்தரணி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார்.
...நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
ReplyDelete(அல்குர்ஆன் : 49:9)
May Allah reward our brother for his patience.
ReplyDeleteAlso we thank Mr.Sumandran for his kind and free service to establish the justice in this land.
JUSTICE ....
We salute Hon. Sumanthiran for his great service offered Mr.Razick and again wish him and his family a long and healthy life.
ReplyDelete