இலங்கை பிரீமியர் லீக்கின் ஒரு அணியை, வாங்கும்படி ஷாருக்கானுக்கு அழைப்பு
இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) போட்டி தொடரில் ஒரு அணிக்கு அனுசரணை வழங்க இந்தியாவின் பொலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் அணியான கல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக்கின் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளை ஷாரூக் கான் தற்போது வைத்திருக்கிறார்.
இந்நிலையில், லங்கா பிரீமியர் லீக்கிலிருந்து ஒரு அணியையும் வாங்கும்படி ஷாரூக் கானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் “லங்கா பிரீமியர் லீக்” கிரிக்கெட் போட்டித் தொடர் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment