கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பட்டத்து இளவரசர்
உலகையே அச்சுறுத்தி வரும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி உருவாக்க உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி கண்டு பிடித்த முதல் நாடு நாங்கள் தான் என ரஷ்யா அறிவித்திருந்தாலும், சோதனை முழுமையாக முடியாத நிலையில் ரஷ்யா அவசரப்பட்டுவிட்டதாகவும், அந்த தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், உலகளவில் 10க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையில் இருக்கின்றன.
இதற்கிடையில், பஹ்ரைன் பட்டத்து இளவரசர், நாட்டில் நடந்து வரும் 3ம் கட்ட கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளில் தன்னார்வத்துடன் பங்கேற்பாளராக கலந்துக்கொண்டுள்ளார்.
உலகின் ஆறாவது பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சினோபார்ம் சி.என்.பி.ஜி உருவாக்கிய தடுப்பூசியைப் பயன்படுத்தி அபுதாபியை தளமாகக் கொண்ட ஜி 42 ஹெல்த்கேர் நடத்திய மூன்றாம் கட்ட சோதனைகளில் சுமார் 6,000 பேர் பங்கேற்கின்றனர்.
பஹ்ரைனில் 3ம் கட்ட சோதனையில் கலந்துக்கொண்ட 6000 பேரில் 50 வயதான இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபாவும் ஒருவர்.
ஆன்டிபாடிகளின் உற்பத்தியைப் பற்றி ஆய்வு செய்ய இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபா உள்ளிட்ட தன்னார்வலர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
Post a Comment