8 மணித்தியாலங்கள் போராடி, சிறுவனின் கையை பொருத்திய வைத்தியர்கள்
கொழும்பில் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் சிறுவன் ஒருவருக்கு ஏற்பட்ட பாரிய விபத்து வெட்டப்பட்ட கை, கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் அர்ப்பணிப்பு காரணமாக சிறுவனின் கை மீட்கப்பட்டுள்ளதுடன் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோரிடம் உள்ள பொறுப்பு தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திடீர் விபத்துக்குள்ளான நிலையில், 3 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் வலது கையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவர் வடை தயாரிப்பதற்கான கலவை தயாரிக்கும் இயந்திரத்தை செயற்படுத்தியுள்ளார்.
இதன்போது சிறுவனின் கை இயந்திரத்திற்குள் சிக்கியமையினால் கையின் எலும்புகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டதுடன் கையில் நிறைய வெட்டுக்காயங்களும் ஏற்பட்டுள்ளன.
வைத்தியசாலையின் வைத்தியர்கள் உடனடியாக சிறுவனுக்கு சிகிச்சையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். 8 மணித்தியாலங்கள் போராடியே வைத்தியர்களால் சிறுவனின் கையை மீட்க முடிந்துள்ளது.
பிள்ளைகள் தொடர்ந்து எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Post a Comment