"மோடிக்கு 70" - தொலைபேசியில் அழைத்து, வாழ்த்தினார் பிரதமர் மஹிந்த
தன்னுடைய 70 ஆவது பிறந்த நாளை இன்று வியாழக்கிழமை -17- கொண்டாடும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.
இருவரும் தொலைபேசியில் சற்று முன்னர் பேசிய போது இந்த வாழ்த்துக்களை பிரதமர் ராஜபக்ஷ தெரிவித்துடன், பொதுவான விடயங்கள் தொடர்பில் பேசியதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
“உங்களுடைய குடும்பத்தில் புதிதாக ஒருவர் இணைந்துகொண்டுள்ளமைக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்” என இதன் போது நாமல் ராஜபக்ஷவுக்கு பிள்ளை பிறந்திருப்பதற்கும் இந்தியப் பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
Post a Comment