Header Ads



சிறைக்கூடத்தின் கூரையிலிருந்த ஓடுகளைக் கழற்றி, 4 கைதிகள் தப்பியோட்டம்


குளியாப்பிட்டிய சிறைக்கூடத்திலிருந்து 4 கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நேற்றிரவு சிறைக்கூடத்தின் கூரையிலிருந்த ஓடுகளைக் கழற்றி அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக நிர்வாக ஆணையாளர் கூறினார்.

எவ்வாறாயினும், தப்பிச்சென்ற கைதிகளில் ஒருவர் வாரியபொல சிறைச்சாலையில் சரணடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.

வாரியபொல சிறைச்சாலையினால் குளியாப்பிட்டிய சிறைக்கூடம் தற்போது கைதிகளின் தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்படுகின்றது.

இந்த நிலையில், தப்பிச்சென்றுள்ள கைதிகள் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க கூறினார்.

இவர்கள் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.