Header Ads



3 மடங்காக அதிகரித்த ஹெரோயின் விலை, பொலிஸார் வெளியிட்ட தகவல்


நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் காரணமாக ஹெரோயின் போதைப்பொருளின் விலை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், ஹெரோயின் குறித்த சோதனைகள் அதிகரித்துள்ளதால் கஞ்சாவின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனைகளினால் ஹெரோயின் போதைப்பொருளின் விலை உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


இதேவேளை, அண்மைய நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பல கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தைமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Highly appreciable measures, and should be continued until the whole networks destroyed...

    ReplyDelete

Powered by Blogger.